Sat Sep 12, 2026 | 01:45 AM IST

இரத்த அழுத்தத்தை கன்ட்ரோல் பண்ணும் கருப்பு உலர்திராட்சை! இப்படி சாப்பிட்டு பாருங்க

Health Benefits Of Eating Black Raisins: உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க நல்ல ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். ஆனால், இந்த காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். இதனால், உடல் பருமன் அதிகரிப்பு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிர பிரச்சனைகள் எழுவதற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் இந்த நோய்களிலிருந்து விடுபட நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.

அதன் படி, உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை உதவுகிறது. இதில் உடல் நலத்தைப் பேணிக்காக்கும் பண்புகள் கருப்பு உலர் திராட்சையில் நிறைந்து காணப்படுகிறது. இவை நீண்ட நேரம் முழுதாக உணரவைப்பதுடன், எடை இழப்பில் உதவுகிறது. மேலும், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யவும் கருப்பு உலர் திராட்சை உதவுகிறது. இதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற முடியும். இதில் கருப்பு உலர் திராட்சை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Raisin Water: யாரெல்லாம் திராட்சை ஊறவைத்த தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா? காரணம் இங்கே!

கருப்பு உலர் திராட்சை

கருப்பு உலர் திராட்சையானது சிறிய இனிப்பு மற்றும் கொஞ்சம் புளிப்பான சுவையைக் கொண்டதாகும். இது கருப்பு திராட்சையை உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. முடி உதிர்தலைக் குறைப்பது முதல் மலச்சிக்கலை நீக்குவது வரை பல்வேறு வகையான எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன்மூலம் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்

எலும்பு ஆரோக்கியத்திற்கு

காலையில் எழுந்ததும் கருப்பு உலர் திராட்சை உட்கொள்வது எலும்பு வலுவாக உதவுகிறது. இதில் பொட்டாசியம் தவிர, மிக அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. இவை இரண்டுமே எலும்புகளுக்கு அத்தியாவசிய உணவாக அமைகிறது. மேலும் ஆய்வுகளின் படி கருப்பு திராட்சையில் நுண்ணூட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இரத்த அழுத்த பிரச்சனைகளுடன் போராடுபவர்கள், கருப்பு உலர் திராட்சை உட்கொள்வது நிவாரணம் அளிக்கிறது. உலர் திராட்சையில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இவை இரத்தத்தில் இருந்து சோடியத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Raisins Side Effects: இவர்கள் எல்லாம் மறந்து கூட கிஸ்மிஸ் சாப்பிடக்கூடாது… ஏன் தெரியுமா?

இரத்த சோகையைத் தடுக்க

இரத்த சோகை பிரச்சினைகள் உள்ளவர்கள் இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இதனைத் தவிர்க்க ஒரு சில கருப்பு திராட்சையை தவறாமல் சாப்பிட வேண்டும். இது தவிர, கருப்பு உலர் திராட்சை கெட்ட கொழுப்புக்கு எதிராக போராடவும், மாதவிடாய் பிடிப்புகளில் நிவாரணம் அளிக்கவும், வாய்வழி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லதாகும். இது தவிர, அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் குறைக்கவும் மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தவும் கருப்பு உலர் திராட்சை உதவுகிறது.

நரைமுடியைத் தவிர்க்க

மோசமான காலநிலை மாற்றத்தால் இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் கருப்பு திராட்சையை சாப்பிட வேண்டும். இதில் அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது கனிமத்தை விரைவாக உறிஞ்சி, முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம்

கருப்பு உலர் திராட்சையானது அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, குடலின் மென்மையான இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது.

கருப்பு உலர் திராட்சையை எப்படி சாப்பிடுவது?

உலர் திராட்சையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் முதலில் தண்ணீரைக் குடித்து ஊறவைத்த உலர் திராட்சையையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை உட்கொள்வது அவற்றின் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Raisins benefits: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சை சாப்பிடுவதன் நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Paneer Vs Tofu: போட்டியில் வென்றது யார்.? எது சிறந்தது.?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content