Good Sleep Habits For Newborns: மனிதனின் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் தூக்கம் மிக இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக, பிறந்த குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் கட்டாயம் தேவை. குழந்தை நன்றாக தூங்க முடியாமல் போனால், உடலில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, குழந்தைக்கு நல்ல தூக்க பழக்க வழக்கங்களை உருவாக்கித் தருவது மிகவும் அவசியம் ஆகும். இப்போது குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் நல்ல தூக்கத்திற்கான பழக்க வழக்கங்களைக் காணலாம்.
குழந்தைக்கான ஆரோக்கிய தூக்க பழக்கங்கள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சரியான தூக்க பழக்கங்களை உருவாக்குவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறும்.
உணவு திட்டமிடல்
குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை உறுதி செய்வதில் முதன்மையானதாக அமைவது அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய உணவு முறை ஆகும். படுக்கைக்கு முன் சரியாகத் திட்டமிட்டு உணவளித்தலின் மூலம் இடைப்பட்ட நேரத்தில் பசியின் காரணமாக எழுந்திருக்க மாட்டார்கள். மேலும், இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், தாய்க்கும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
தூங்கும் நேரம் திட்டமிடல்
பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவர். எனினும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக, குழந்தைகளுக்கு நிலையான தூக்க அட்டவணையை பரிந்துரைக்க வேண்டும். மேலும், இது அவர்களுக்கு தூங்கும் மற்றும் விழித்திருக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வதாக இருக்க வேண்டும். அதாவது, குளிக்க வைப்பது, உணவளிப்பது அல்லது இசை கேட்க வைப்பது உள்ளிட்ட சில இரவு நேர நடைமுறைகளை உருவாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!
நல்ல தூக்க சூழல்
குழந்தைக்கு நல்ல தூக்க பழக்க வழக்கங்களைத் தருவதில் நல்ல தூக்க சூழலும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே, நிம்மதியான, சத்தமில்லாத தூக்க சூழ்நிலையை குழந்தைகளுக்கு உருவாக்கித் தர வேண்டும்.
அமைதிப்படுத்தியை பயன்படுத்துதல்
குழந்தை தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால், குழந்தைக்கு அமைதிப்படுத்தியைக் கொடுக்கலாம். மேலும் இது குழந்தைக்கு நல்ல தூக்க சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பாதுகாப்பான தூக்கம்
சில சுகாதாரப்பழக்க வழக்கங்களும் குழந்தையின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. சில குறிப்பிடப்பட்ட காலம் வரை குழந்தையை பக்கத்தில் வைத்து தூங்குவது நல்லது.
ஒளி வெளிப்பாடு
தூக்க சுழற்சியை மேம்படுத்துவதில் ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பகல் நேரத்தில் வெளிச்சத்தையும் இரவு நேரத்தில் இருளையும் வெளிப்படுத்த வேண்டும். இயற்கையான சூரிய ஒளி குழந்தையின் மீது படும் போது, அது குழந்தையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். இருளில் இருக்கும் போது படுக்கை நேரத்தையும் குறிக்கும். இது அவர்களின் தூக்க சுழற்சியை மேம்படுத்த உதவும்.
குழந்தை சோர்வாக இருப்பதை எப்படி உணர்வது
பிறந்த குழந்தைகள் ஆரம்ப காலத்தில் அதிகமாக தூங்குவர். ஆனால், இவர்கள் விழித்திருக்கும் நேரம் படிப்படியாக அதிகரிக்கும். இருப்பினும் அதிகப்படியான நேரத்தில் விழித்திருந்தால், அவர்கள் தூங்குவதற்கு கடினமாகவும், சோர்வாகவும் இருப்பதை உணர்வார்கள்.
இது தவிர குழந்தைகள் சோர்வாக இருப்பதை உணர்த்தும் மற்ற சில அறிகுறிகளைக் காணலாம்.
- குழந்தைகள் கண்களைத் தேய்ப்பதும், காதை கைகளால் அசைத்துக் கொன்டும் இருக்கும்.
- அதிக நேரம் அழுதல், பொம்மைகள் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது
- குழந்தை சோர்வாக இருக்கும் சமயத்தில் அமைதியாக இருக்கலாம்.
இவை அனைத்தும் குழந்தை சோர்வாக இருப்பதை உணர்த்துகிறது.
குழந்தைகள் தூங்குவதில் சிரமம் அதிகமாக இருந்தால் மற்றும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் உதவி பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!
Image Source: Freepik