What is a healthy sleep schedule for kids: கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியமாகும். ஆனால் இது மட்டும் முக்கியமல்ல. குழந்தைகள் பிறந்த பிறகும் கூட அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். இந்நிலையில் அவர்களுக்கு நல்ல உணவு, சரியான உடல் செயல்பாடுகள் மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். இவை அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
இதில் தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக, குழந்தைகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் மன வளர்ச்சிக்கு போதுமான மற்றும் வழக்கமான தூக்கத்தை வழங்குவது மிகவும் முக்கியமாகும். தூக்கமின்மை காரணமாக குழந்தைகளில் எரிச்சல், கவனம் இல்லாமை, படிப்பில் ஆர்வம் குறைதல் மற்றும் உடல் பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்க அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகும்.
இந்நிலையில், டெல்லியின் ஷாஹ்தராவில் உள்ள எஸ்.டி.என். மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான டாக்டர் லலித் ஹரி பிரசாத் சிங் அவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்க அட்டவணை குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: சீக்கிரம் தூங்க இந்த 3 பொருட்களை பாலில் கலந்து குடிங்க..
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தூக்க அட்டவணை
படுக்கை நேர வழக்கத்தை உருவாக்குவது
விடுமுறை நாளாக இருப்பினும், குழந்தைக்கு படுக்கை மற்றும் விழித்தெழும் நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் தூங்கும் மற்றும் விழித்தெழும் நேரம் நிர்ணயிக்கப்படுவதன் மூலம் அவர்கள் போதுமான தூக்கத்தைப் பெறலாம். குழந்தைக்கு ஒரு அமைதியான படுக்கை நேர வழக்கத்தை உருவாக்க வேண்டும். அழகான கதைகளைச் சொல்வது அல்லது வசதியான ஆடைகளை அணிவிப்பது போன்றவற்றின் மூலம் அவர்களின் மனதை தூக்கத்திற்கு தயார்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
குழந்தையின் அறையை அமைதியாகவும், குளிராகவும், இருட்டாக வைத்திருப்பது
தூங்கும் இடத்தை நல்ல மற்றும் ஆரம்ப தூக்கத்திற்கு உகந்ததாக மாற்றுவது மிகவும் அவசியமாகும். எனவே குழந்தை நன்றாக தூங்குவதற்கு அமைதியான மற்றும் வசதியான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு, அறையில் விளக்குகளை குறைவாக எரிய வைக்கலாம். மேலும் சத்தத்தைக் குறைக்க வேண்டும். விரும்பினால், லேசான திரைச்சீலைகள் மற்றும் வசதியான மெத்தைகளைப் பயன்படுத்தலாம்.
பிரகாசமான விளக்குகள் மற்றும் மின்னணு சாதனங்களிலிருந்து விலகி இருப்பது
குழந்தை ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பாக, பிரகாசமான ஒளி அல்லது மொபைல், டிவி மற்றும் டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதில் வெளிப்படும் நீல ஒளி தூக்கத்தைத் தரும் மெலடோனின் ஹார்மோன்உற்பத்தியில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
போதுமான தூக்கம் கிடைப்பது
பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப அதிக தூக்கம் தேவைப்படுகிறது. உதாரணமாக, 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணிநேரமும், 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 9 முதல் 12 மணிநேரமும், 13 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 9 முதல் 12 மணிநேரமும் தூக்கம் தேவைப்படுகிறது. மேலும் இவை சிறந்த உடல், மன வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நேரத்தின் படி, குழந்தையின் இரவு மற்றும் பகல் தூக்கத்திற்கான நேரத்தை தீர்மானிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Baby Sleep Tips: குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!
காலை எழுந்தவுடன் சிறிது சூரிய ஒளியை எடுத்துக் கொள்வது
காலை நேரத்தில் சூரிய ஒளி மிகவும் லேசானதாக இருக்கும். எனவே காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது உடலுக்குப் போதுமான அளவு வைட்டமின் டியைத் தருகிறது. அது மட்டுமல்லாமல், குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் கடிகாரத்தை சமநிலைப்படுத்தவும் இவை உதவுகின்றன.
பகலில் நீண்ட தூக்கத்தைத் தவிர்ப்பது
குழந்தைக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, பகலில் சிறிது நேரம் தூங்குவதும் முக்கியம். ஆனால், பகல் நேரத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக தூங்குவது, அவர்களின் இரவு தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தை பகலில் நீண்ட நேரம் தூங்கினால், அவரது இந்தப் பழக்கத்தை சரிசெய்யலாம்.
காஃபினிலிருந்து விலகி இருப்பது
காபி, தேநீர், குளிர் பானங்கள் அல்லது சாக்லேட்டுகள் போன்றவற்றில் அதிகளவிலான காஃபின் உள்ளது. இவை குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் தூக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகளுக்கு இதுபோன்ற பொருட்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்ப்பது அவசியம்.
முடிவு
குழந்தைகளின் தூக்கப் பழக்கத்தை சிறப்பாக மற்றும் சீராக மாற்றுவதன் மூலம் அவர்களின் மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஒரு சிறந்த தூக்க அட்டவணை அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனநிலையை நேர்மறையாக வைத்திருக்கவும், கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே தைக்கு நல்ல தூக்க அட்டவணையை வழங்க இந்த குறிப்புகளைப் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kids Sleep Tips: உங்கள் பிள்ளைகள் இரவில் சீக்கிரமா தூங்காமல் அடம் பிடிக்கிறார்களா? இந்த உணவை ஊட்டுங்க!
Image Source: Freepik