Fri Sep 11, 2026 | 11:46 PM IST

Expert

குழந்தைகள் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் 3 ஸ்மார்ட் உணவுகள்.. நிபுணர் தரும் கருத்து

குழந்தைகள் நல்ல தூக்கத்தைப் பெறவும், நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் அன்றாட உணவில் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க வேண்டும். இதில் எந்தெந்த உணவுகள் குழந்தைகள் நன்கு தூக்க உதவும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியமாகும். ஆனால் இது மட்டும் முக்கியமல்ல. குழந்தைகள் பிறந்த பிறகும் கூட அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். இந்நிலையில் அவர்களுக்கு நல்ல உணவு, சரியான உடல் செயல்பாடுகள் மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். இவை அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது.

இதில் தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக, குழந்தைகளின் நல்ல ஆரோக்கியம் மற்றும் மன வளர்ச்சிக்கு போதுமான மற்றும் வழக்கமான தூக்கத்தை வழங்குவது மிகவும் முக்கியமாகும். தூக்கமின்மை காரணமாக குழந்தைகளில் எரிச்சல், கவனம் இல்லாமை, படிப்பில் ஆர்வம் குறைதல் மற்றும் உடல் பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. இதில் நல்ல தூக்கத்தைப் பெற குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Kids Sleep Tips: உங்கள் பிள்ளைகள் இரவில் சீக்கிரமா தூங்காமல் அடம் பிடிக்கிறார்களா? இந்த உணவை ஊட்டுங்க!

குழந்தை நல்ல தூக்கத்தைப் பெற உதவும் உணவுகள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, உங்கள் குழந்தையை இரவில் நிதானமாக இருக்க வைக்க போராடுகிறீர்களா? மாலை 4 மணி முதல் படுக்கைக்கு செல்லும் வரை அவர்கள் சாப்பிடும் உணவு, அவர்கள் எவ்வளவு விரைவாக தூங்குகிறார்கள் - எவ்வளவு நன்றாக தூங்குகிறார்கள் என்பதில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு தூக்கத்தை ஆதரிக்கும் உணவு வழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்கியுள்ளார்.

நெய்யுடன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாஷ்

சர்க்கரைவள்ளிக்கிழங்கை நெய் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் நல்ல தூக்கத்தைப் பெற முடியும். ஏனெனில், இதில் வைட்டமின் B6 ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆறுதலான சிற்றுண்டி மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கிறது. மெலடோனின் என்பது நல்ல தூக்கத்தை ஆதரிக்க உதவக்கூடியதாகும். மேலும் இது மெதுவான, நிலையான ஆற்றலை அளிக்கிறது. அதே சமயம், இது மாலை நேர எரிச்சலைத் தடுக்க சரியான தேர்வாகும்.

பூசணி விதைகளுடன் ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் மற்றும் பூசணி விதைகள் சேர்த்து தயாரித்த கஞ்சியைக் குடிப்பது குழந்தைகள் நல்ல தூக்கத்தைப் பெற வழிவகுக்கிறது. ஏனெனில், இதில் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இந்த ரெசிபியானது, உடலை நிதானப்படுத்தவும் ஓய்வுக்குத் தயாராகவும் உதவுகிறது.

வாழைப்பழம் மற்றும் பாதாம் வெண்ணெய் ரோல்

வாழைப்பழத்துடன் பாதாம் வெண்ணெய் சேர்த்த ரோல் தயார் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களின் கலவையானது செரோடோனின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இவை நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் படுக்கைக்கு முன் அமைதியாகவும் திருப்தியாகவும் உணருவர்.

இந்த பதிவும் உதவலாம்: தூக்கம் முக்கியம் பாஸ்! குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தூக்க அட்டவணை.. மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ

படுக்கைக்கு முன் - ஜாதிக்காயுடன் சூடான பால்

சாதாரணமாகவே, தூங்கும் முன்பாக குழந்தைக்கு பால் வழங்குவது வழக்கமாகும். பாலில் இயற்கையாகவே டிரிப்டோபன் உள்ளது. எனினும், இதில் ஒரு கூடுதல் பொருளாக ஜாதிக்காய் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களின் தூக்க ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஏனெனில், ஜாதிக்காய் மென்மையான தூக்கத்தைத் தூண்டும் மற்றும் அமைதியான விளைவுகளைச் சேர்க்கிறது.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

ஆய்வின் படி, நல்ல தூக்கத்தைப் பெற உதவும் சில குறிப்புகளை நிபுணர் பரிந்துரைக்கிறார்.

  • மெக்னீசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது
  • வைட்டமின் B6 மெலடோனினை ஆதரிக்கிறது
  • டிரிப்டோபன் உடல் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது

இவை ஒன்றாக, குழந்தைகள் வேகமாக தூங்கவும், நீண்ட நேரம் தூங்கவும் உதவுகின்றன.

குறிப்பு

இந்த சிறிய உணவு மாற்றங்களின் மூலம் குழந்தையின் தூக்கம், மனநிலை மற்றும் கவனம் ஆகியவற்றில் பெரிய வித்தியாசத்தைக் காணலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ப பகலில் எவ்வளவு நேரம் தூங்குவது நல்லது? நிபுணர் தரும் அறிவுரை

Image Source: Freepik

Read Next

பெண்கள் இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்த என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 11, 2025 00:32 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content