
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இன்றைய நவீன காலத்தில் பலரும் நல்ல தூக்கம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது அதிக திரை நேரம் ஆகும். குறிப்பாக, இரவு தூங்கும் முன்பாக அதிக நேரம் திரையைப் பார்ப்பது அவர்களின் தூக்கத்தை மோசமாக பாதிக்கக்கூடும். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை பெரிதும் பாதிக்கப்படலாம். ஒருவர் நல்ல இரவு தூக்கத்தைப் பெறாத போது அவர்கள் அன்றைய நாளுக்குத் தேவையான புத்துணர்ச்சியை இழக்கின்றனர்.
முக்கியமான குறிப்புகள்:-
இந்நிலையில், தூக்கமின்மையைத் தவிர்த்து நல்ல தூக்கம் பெற உதவும் குறிப்புகள் குறித்து மருத்துவர் ஹன்சாஜி அவர்கள் தி யோகா இன்ஸ்டிடியூட் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம். மருத்துவரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் நாம் எப்போதும் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனை தூக்கத்தில் சிரமமான, தூக்கமின்மை ஆகும். மேலும், வாழ்க்கையில் பதற்றம், உறவுகளில் பதற்றம், வாழ்க்கை சீராக இயங்குவதைப் பார்க்க அடிக்கடி முயற்சிக்கும் மின்னணு சாதனங்கள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இவை அனைத்தும் இயற்கையாகவே தூக்கத்தில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. இதில் தூக்கமின்மையை சமாளிக்க உதவும் வழிகளைக் காணலாம்.
தூக்கமின்மையை சமாளிக்க ஐந்து வழிகள்
தூக்கத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வது
நாம் தூங்கும் முன் செய்யும் சில விஷயங்களின் மூலம் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
- தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிட வேண்டும்.
- குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் அனைத்து இரவு வேலைகளையும் முடித்துவிட வேண்டும்.
- மேலும், திரைப்படங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அனைத்தையும் பார்ப்பதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
- தூங்கும் முன், சிந்தனையில் பதற்றம் அல்லாமல், மனதை அமைதிப்படுத்த வேண்டும். இதில் நல்லதை சிந்திப்பது அல்லது புத்தகம் படிப்பது போன்றவை அடங்கும்.
உணவு முறை
- நல்ல, சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மனதை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
- எனவே, கிச்சடி போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிய உணவு, சூப்கள் போன்றவற்றை இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
- பிறகு, தூங்கும்போது பசியாக இருந்தால் வாழைப்பழம் சாப்பிடலாம் அல்லது மஞ்சள் சேர்த்து சூடான பால் அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Foods For Sleep: படுத்த உடன் தூங்க இந்த உணவை சாப்பிடவும்
இரவில் கவலைப்படுவதைத் தவிர்ப்பது
- இது மிக முக்கியமான விஷயம். உண்மையில், இன்றைய காலத்தில் பலரும் வாழ்க்கையை எண்ணி கவலையுறுகின்றனர். குறிப்பாக, இரவில்.
- இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் கவலையைப் பற்றி சிந்திக்கக் கூடாது.
- இதற்கு பணிகளைத் திட்டமிட்டு, முன்கூட்டியே செய்து முடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
- இரவு உணவிற்குப் பின்னர், காலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடலாம். இது அடுத்த நாள், புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
சுவாசத்துடன் ஒன்றிணைப்பது
மருத்துவரின் கூற்றின் படி, மூச்சைக் கட்டுப்படுத்த முடிந்தால் மனதை நிர்வகிக்க முடியும்.
சந்திர பேதன பிராணயாமா (chandra bhedana pranayama) - இந்த ஆசனத்தில் கண்களை மூடிக்கொண்டு உங்கள் இடது நாசியிலிருந்து மூச்சை இழுத்து, உங்கள் வலது நாசியின் மூலம் மூச்சை வெளிவிட வேண்டும். பின், மீண்டும் இடது நாசியிலிருந்து மூச்சை உள்ளிழுத்து, வலது நாசியில் வெளிவிடலாம். இதில் மூச்சில் கவனம் செலுத்துவதால், நம்மால் சிந்திக்க முடியாது.
வயிற்றில் சுவாசத்தை உணர்வது - படுத்த பிறகு முழங்காலை மடித்து, பின்னர் உங்கள் ஒரு கையை உங்கள் வயிற்றில் வைத்திருக்கலாம். இப்போது சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதில் வயிறு மேலே சென்று, கீழே வருவதை உணரலாம். இந்த பயிற்சி செய்வது அனைத்து பதற்றம் மற்றும் கவலைகளிலிருந்தும் விலகி, உங்கள் மீது கவனம் செலுத்த உதவும்.
நல்ல தூக்கம் பெற ஆசனங்கள்
தூக்கத்திற்கு சில ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அவை பத்ராசனம் மற்றும் சசங்காசனம் ஆகும்.
பத்ராசனம் (Bhadrasana ) - இந்த ஆசனம் செய்ய, முதலில் படுத்து, கால்களை மடித்து உங்கள் உடலை நோக்கி கொண்டு வந்து சிறிது நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும். இது உண்மையில் பின் மட்டத்தில் அழுத்தம் மற்றும் பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது.
சசங்காசனம் (Shashankasana) - இதில் படுக்கையில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து உங்கள் கால்களை விரித்து, பின்னர் முன்னோக்கி சாய்ந்து உங்கள் உடலை முன்னால் கொண்டு வர வேண்டும். பின்னர், கைகளையும் முன்னால் நீட்டி, அந்த நிலையில் ஓய்வெடுக்க வேண்டும். இந்த நிலையில், வயிற்றில் மென்மையான அழுத்தத்தைக் கொடுக்கும் போது எந்த வாயுக்கள் அல்லது உங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய அனைத்தும் நிலைபெறுகிறது.
ஒருவர் தூங்குவதில் சிரமப்படும்போது, இந்த வழிகளைக் கையாள்வதன் மூலம் நல்ல மற்றும் சீரான தூக்கத்தைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தூக்கமின்மையால் அவதியா? தூங்கும் முன் 2-3 நிமிடம் இத மட்டும் செய்யுங்க.. அப்படி தூக்கம் வரும்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 27, 2025 09:10 IST
Published By : கௌதமி சுப்ரமணி