Best natural ways to fall asleep fast and stay asleep: இன்றைய நவீன காலத்தில் பலரும் தங்களது பழக்க வழக்கங்களின் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, இன்றைய மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக, பலரும் தூக்கமின்மையால் அவதியுறுகின்றனர். பொதுவாக நல்ல தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், நல்ல தூக்கத்தைப் பெறாதது அல்லது தூக்கமின்மை ஏற்படுவதன் காரணமாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
நல்ல தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு உதவும் வகையில் டாக்டர் விவேக் ஜோஷி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தூக்கமின்மைக்கான காரணங்கள்
மருத்துவர் விவேக் ஜோஷி முதலில் தூக்கமின்மை அல்லது தொந்தரவு செய்யப்பட்ட தூக்கத்திற்கான காரணங்கள் குரித்து பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
போதிய உணவு எடுத்துக் கொள்ளாதது
அவரின் கூற்றுப்படி, தூக்கமின்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் அதற்கான பிரச்சனைகளைத் தீர்க்கலாம். இன்றைய உலகில் என்ன நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், மக்கள் வெவ்வேறு உணவு முறைகளை முயற்சி செய்கின்றனர். பகல் முழுவதும் அவர்கள் குறைவாக சாப்பிடுகிறார்கள். இரவில் கூட குறைவாக சாப்பிடுகிறார்கள். இதனால், நாளின் இறுதியில் அவர்கள் பசியுடன் தூங்க முயற்சிக்கின்றனர்.
ஆனால், இவை வாதத்தை அதிகரிக்கக்கூடும். அதாவது உடலில் உள்ள காற்றின் கூறு ஆகும். இவை நிச்சயமாக, தூக்கத்தில் தொந்தரவு ஏற்படுத்துகிறது அல்லது அவ்வளவு நல்ல தூக்கத்தைத் தராது. எனவே, தூக்கமின்மை உணவுடன் தொடர்புடையதா இல்லையா என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறெனில், இரவில் சில கலோரிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. , நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை எடுத்துக் கொண்டோம், நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும்.
இந்த பதிவும் உதவலாம்: தூக்கம் முக்கியம் பாஸ்! குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தூக்க அட்டவணை.. மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ
குடல் ஆரோக்கியம்
மோசமான செரிமானத்தின் காரணமாக, உடலில் மெலடோனின் அதிகமாக உற்பத்தி செய்ய முடியாமல் மெலடோனின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அவர்களின் தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்துகிறது. நல்ல செரிமானம் மற்றும் ஆரோக்கியமான குடல் மிகவும் முக்கியமானதாகும். குடல் ஆரோக்கியத்திற்கு சரியான நேரத்தில் சாப்பிடுவது, தூங்குவது, பயிற்சி செய்வது போன்றவை உதவியாக இருக்கும்.
மோசமான மனநிலை
நல்ல செரிமானம் இருந்தால் நல்ல மனநிலை இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் மோசமான மனநிலையால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. தூங்கச் செல்லும்போது அதிகமாக சிந்திப்பது, இணையத்தில் தகவல்களைப் பார்ப்பது போன்றவை மனநிலையை மோசமாக்குகிறது. இதனால், பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்பட்டு, மனநிலையை மோசமாக்குகிறது. இந்நிலையில், மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் தூக்கத்தை மேம்படுத்தலாம்.
நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்திற்கான குறிப்புகள்
நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான சிகிச்சை முறைகள் ஆயுர்வேதத்தின் முழுமையான மருத்துவ அறிவியலில் கூறப்படுகிறது.
வாத சமநிலை
தூக்கமின்மைக்கு உடலில் உள்ள வாத சமநிலையின்மை காரணமாக இருக்கலாம். வாத என்றால் காற்று கூறு. எனவே வாத அமைதிப்படுத்தும் உணவைப் பின்பற்றுவது சிறந்த தேர்வாகும். வாத சமநிலைக்கான உணவுப்பட்டியலில், சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப எளிய உணவைப் பின்பற்றலாம். இது உடலில் உள்ள வாதத்தை சமநிலைப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
எண்ணெய் மசாஜ்
நல்லெண்ணெயை எடுத்து, சிறிது சூடாக்கி, இந்த சூடான எண்ணெயுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்ய வசதியாக இல்லை என்றால், கால்களை மட்டும் மசாஜ் செய்யலாம். இது உதவியாக இருக்கும். தலை மசாஜ் செய்தால், அது மிகவும் உதவியாக இருக்கும். இது உடலில் வாதத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. மூளையை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும் பல குறிப்பிட்ட புள்ளிகள் நம் பாதங்களில் உள்ளன. ஆனால் எண்ணெய் உடலில் உள்ள காற்று கூறுகளான வாதத்தை சமநிலைப்படுத்தும். எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்.
எண்ணெயை எடுத்துக் கொள்வது
இரவில் தூங்குவதற்கு முன் 1 தேக்கரண்டி எண்ணெய் எடுத்துக்கொள்வது தூக்கத்திற்கு உதவுவதாக மருத்துவர் பரிந்துரைக்கிறார். எள் விதை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பூசணி எண்ணெய் என எதுவாக இருந்தாலும், அதை எடுத்துக் கொள்வது வாதத்தை சமநிலைப்படுத்தவும், உடலை அமைதிப்படுத்தவும் உதவுவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மக்னீசியம் உட்கொள்ளல்
தூங்குவதற்கு முன் மக்னீசியம் உட்கொள்வது தூக்கத்திற்கு நன்மை பயக்கும். ஒருவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தால், உடலுக்கு நிறைய மெக்னீசியம் தேவைப்படுவதைக் குறிக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு மக்னீசியம் பற்றாக்குறை இருக்கலாம். இந்நிலையில், மெக்னீசியத்தை சேர்ப்பது தூக்கத்திற்கு உதவுகிறது. எனவே நல்ல தரமான மெக்னீசியத்தை உட்கொள்ள வேண்டும். வாத்தை அமைதிப்படுத்தும் உணவைப் பின்பற்றி மெக்னீசியம் சேர்ப்பது பெரிய உதவியாக இருக்கும்..
தேநீர் அருந்துவது
உடலை அமைதிப்படுத்தும் தேநீரைக் குடிக்கலாம். உதாரணமாக, புதினா தேநீர், அஷோகந்தா தேநீரைக் குடிப்பது நன்மை தரும். இது உடலை சமநிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் உதவுகிறது. இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தூங்கும் முன் மனம் அமைதியா இருக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள், பானங்கள் இதோ.. நிபுணர் சொன்னது
Image Source: Freepik