Thu Oct 29, 2026 | 11:52 AM IST

Doctor Verified

பெண்களின் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.! வாழைப்பூ ஜூஸ் இப்படி குடிங்க..

பெண்களில் காணப்படும் ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் கோளாறு மற்றும் PCOS போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பூ ஜூஸ் எவ்வாறு உதவுகிறது? மருத்துவர் உஷா நந்தினி விளக்கும் நன்மைகள், தயாரிப்பு முறைகள் மற்றும் தினசரி பயன்படுத்தும் பயன்கள்.
பெண்களின் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.! வாழைப்பூ ஜூஸ் இப்படி குடிங்க..பெண்களின் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.! வாழைப்பூ ஜூஸ் இப்படி குடிங்க..

பெண்களிடம் பெருமளவில் காணப்படும் ஹார்மோனல் சமநிலையின்மை, மாதவிடாய் சீர்கேடு, திடீர் உடல் எடை மாற்றம் மற்றும் PCOS போன்ற பிரச்சனைகளுக்கான இயற்கை தீர்வுகளைத் தேடும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வாழைப்பூ பெண்களின் உடல்நலத்திற்கு மிக வலுவான மருந்தாக அமையும் என மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்திருக்கிறார்.

ஹார்மோன் சமநிலையை சீராக்கும் வாழைப்பூ

பெண்களில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இது நீண்டகாலத்தில் PCOS உருவாகும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மருத்துவர் உஷா நந்தினி கூறுவதாவது, “வாழைப்பூவில் உடல் ஹார்மோன்களை இயற்கையாக சீரமைக்கும் தன்மை உள்ளது. இதனைச் சாறு வடிவத்தில் குடித்தால் மாதவிடாய் சுழற்சி சீராகும். கருமுட்டை (Egg) வளர்ச்சி மேம்பட்டு கர்ப்பத்திறன் (Fertility) கூட உதவும்.”

வாழைப்பூ ஜூஸ் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

* வாழைப்பூ

* பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

* வாழைப்பூவை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

* இட்லி பாத்திரத்தில் ஒரு தூய துணி போட்டு, அதன் மேல் நறுக்கிய வாழைப்பூவை வைத்து ஆவியில் வேகவைக்கவும்.

* வெந்த வாழைப்பூவை எடுத்து நன்கு பிழிந்து சாறு எடுக்கவும்.

* அந்த சாற்றில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும்.

* இதனால் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த வாழைப்பூ ஜூஸ் தயாராகி விடும்.

இந்த பதிவும் உதவலாம்: ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் உங்களுக்கு உதவும்.. மருத்துவர் தரும் விளக்கம்

எப்போது, எப்படி குடிக்க வேண்டும்?

* தினசரி அல்லது வாரத்தில் 4–5 முறை காலை நேரத்தில் குடிக்கலாம்.

* தொடர்ச்சியாக குடித்தால் மாதவிடாய் சீராக, PCOS அறிகுறிகள் குறைந்து உடல் இலகுவாக இருக்கும்.

வாழைப்பூ ஜூஸின் பிரதான நன்மைகள்

* ஹார்மோன் சமநிலையை எளிதில் சீரமைக்கும்

* மாதவிடாய் தாமதம் / அதிக இரத்தப்போக்கு குறையும்

* PCOS–ஐ கட்டுப்படுத்த உதவும்

* கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும்

* செரிமானத்தை சீராக்கும்

* வீக்கம், வயிற்றுப்போக்கு,Constipation போன்ற பிரச்சனைகளை குறைக்கும்

* பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இறுதியாக..

பெண்களின் உடல்நல பிரச்சனைகளில் பொதுவாக காணப்படும் மாதவிடாய் சீர்கேடுகள், PCOS போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான, பாதுகாப்பான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத தீர்வாக வாழைப்பூ ஜூஸ் செயல்படுகிறது. தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல்நலத்தில் தெளிவான மாற்றத்தை உணரலாம் என்று மருத்துவர் உஷா நந்தினி வலியுறுத்துகிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் நிபுணர்கள் பகிர்ந்த பொதுவான விளக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. உங்களுக்கு ஏற்கனவே PCOS, ஹார்மோன் பிரச்சனைகள் அல்லது பிற நோய்கள் இருந்தால், இதை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது டையட்டீஷியனை அணுகவும்.

Read Next

→ நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நைட் தூங்கும் முன் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 26, 2025 18:53 IST

    Published By : Ishvarya Gurumurthy