Doctor Verified

வெஜிடபிள் ஜூஸ்.. ஹெர்பல் ஜூஸ்.. ஹெல்தியா? இல்லையா? டாக்டர் சொல்றத கேட்டு தெரிஞ்சிக்குங்க!

வெஜிடபிள் ஜூஸ், ஹெர்பல் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமா? டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கும் நன்மைகள், ஆபத்துகள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் இங்கே. உண்மையை இப்போது அறியுங்கள்!
  • SHARE
  • FOLLOW
வெஜிடபிள் ஜூஸ்.. ஹெர்பல் ஜூஸ்..  ஹெல்தியா? இல்லையா? டாக்டர் சொல்றத கேட்டு தெரிஞ்சிக்குங்க!


பழங்களை ஜூஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமில்லை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மக்கள் தற்போது வெஜிடபிள் ஜூஸ் மற்றும் ஹெர்பல் ஜூஸ் பக்கம் திரும்புகிறார்கள். ஆனால், இதை குடிப்பது உண்மையில் நல்லதா? அல்லது அதனால் ஆபத்துகள் இருக்கிறதா? இதற்கு பிரபல மருத்துவர் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார்.

வெஜிடபிள் ஜூஸில் என்ன கிடைக்கிறது?

காய்கறிகளை ஜூஸாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள மல்டி வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கிடைக்கும். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது சுகாதார நன்மைகளை தரக்கூடும்.

ஆனால், இதனால் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. நார்ச்சத்து (Fiber) முழுமையாக நீங்கி விடுகிறது. இதனால் ஜீரணத்திற்கு உதவும் சக்தி குறைகிறது. பசி கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்து விரைவில் மீண்டும் பசி எடுக்கும். இதன் விளைவாக, உடல் எடை குறையவும், கொலஸ்டிரால் கட்டுப்பாட்டிலும் சிக்கல்கள் உருவாகலாம்.

artical  - 2025-09-06T092733.716

அறிவியல் ஆதாரங்கள் உள்ளதா?

பெரும்பாலான ஆய்வுகள், காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஜூஸாக எடுத்தாலும் கிடைக்கும் என்று கூறுகின்றன. ஆனால், நேரடியாக சாப்பிடுவதில்தான் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். எனவே, காய்கறிகளை சாப்பிடுவதுதான் முழுமையான பலனை தரும் என்று டாக்டர் சந்தோஷ் கூறுகிறார்.

கவனம் தேவை..

வீட்டில் தயாரிக்கும் வெஜிடபிள் ஜூஸ் அல்லது ஸ்மூத்தி ஓரளவு குடிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் வெளியிலிருந்து வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. அவற்றில் உண்மையில் காய்கறிகள் மட்டும்தான் உள்ளதா? அல்லது ஹெர்ப்ஸ் என்ற பெயரில் மருந்துகள் அல்லது வேறு கலவைகள் சேர்க்கப்படுகிறதா? என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.

இது மெயின் உணவா?

மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வெஜிடபிள் ஜூஸை ஒரு நேர உணவிற்கு பதிலாக எடுத்துக் கொள்வது. இது முற்றிலும் தவறு. ஜூஸ் என்பது Supplement ஆக மட்டும் கருதப்பட வேண்டும். முக்கிய உணவை மாற்றும் வகையில் எப்போதும் குடிக்கக்கூடாது என்று மருத்துவர் எச்சரிக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: கேரட் ஜூஸ் குடித்தால் நிறம் மாறுமா.? மருத்துவர் அருண்குமார் விளக்கம்..

யாருக்கு பொருத்தம்?

* சரியான உடல் எடையில் இருப்பவர்கள்

* தினசரி நடைபயிற்சி, ஸ்டிரென்த் டிரெயினிங் செய்வவர்கள்

* போதிய புரதம் மற்றும் நார்ச்சத்துகளை உட்கொள்வவர்கள்

* புகை, மதுவிலிருந்து விலகியவர்கள்

* போதிய தூக்கம் பெறுபவர்கள்

* மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்வவர்கள்

இவர்கள் மட்டுமே, கூடுதலாக Supplement ஆக வெஜிடபிள் ஜூஸ் குடித்தால் உண்மையான பலன் கிடைக்கும். இல்லையெனில், வெறும் ஜூஸை மட்டுமே குடிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று டாக்டர் சந்தோஷ் எச்சரிக்கிறார்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS,DNB,MCh,DABRM,PhD (@drsanthoshjacob)

இறுதியாக..

வெஜிடபிள் ஜூஸ், ஹெர்பல் ஜூஸ் குடிப்பதில் ஒரு அளவு நன்மைகள் இருந்தாலும், அது முக்கிய உணவிற்கு மாற்றாக இருக்கக் கூடாது. வீட்டில் தயாரிக்கும் போது சுத்தமாகவும், அளவோடு குடிப்பது நல்லது. ஆனால், முழு நன்மைகளை பெற, காய்கறிகளை நேரடியாக சாப்பிடுவது மிகச் சிறந்தது.

{Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான மருத்துவ விளக்கங்களாகும். இது மருத்துவரின் தனிப்பட்ட ஆலோசனையை மாற்றக்கூடியதல்ல. ஆரோக்கியம், டயட், ஜூஸ் பயன்பாடு தொடர்பான எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.}

Read Next

உணவுக்குப் பிறகு சோர்வா? பாகற்காய் தான் தீர்வு – டாக்டர் பால் விளக்கம்..

Disclaimer

குறிச்சொற்கள்