பலருக்கு உணவு உட்கொண்ட பிறகு சோர்வும், வயிறு உப்புசமும் ஏற்படுகிறது. இதற்கான தீர்வை பாகற்காயில் காணலாம் என்று பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் பாகற்காயை சாப்பிட விரும்புவதில்லை. சிறுவயதில் அம்மா அல்லது பாட்டி கட்டாயப்படுத்தினால் மட்டுமே சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். ஆனால், பாகற்காயின் கசப்பே உடலுக்கான மருந்து என்று அவர் கூறுகிறார்.
பாகற்காயின் நன்மைகள்
சர்க்கரை கட்டுப்பாடு
பாகற்காய் உடலின் இயற்கை மெட்டபாலிசம் எனப்படும் செயல்முறையை தூண்டும் AMPK என்ற எஞ்சைமை (Metabolic Engine) செயல்பட வைக்கிறது. இதன் மூலம் கல்லீரல் மற்றும் அஜீரணக் கோஷ்டிகள் (Pancreas) சரியான நேரத்தில் தேவையான எஞ்சைம்களையும் பைல் சுரப்புகளையும் உற்பத்தி செய்கின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
செரிமான நன்மை
உணவு வயிற்றில் படிந்து, கனமாக உணர்வை ஏற்படுத்தும்போது, பாகற்காய் அதற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இது ஜீரணத்தை வேகமாகவும், சீராகவும் செயல்படச் செய்கிறது.
வயிற்று நிறைவு கட்டுப்பாடு
பாகற்காயின் கசப்பு தன்மை உடலில் உள்ள Vagus nerve எனப்படும் நரம்பை தூண்டும். இது குடல் மற்றும் மூளை இடையேயான தொடர்பை மேம்படுத்துகிறது. இதனால் மூளை உண்மையான பசி, நிறைவு சிக்னலை உடனே புரிந்து கொள்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறையும்.
டாக்டர் பாலின் சீக்ரெட் ரெசிபி.. பாகற்காய் ஏர் ஃப்ரைட் சிப்ஸ்.!
* பாகற்காயை நறுக்கி, உப்புடன் கலந்து கழுவிக் கொள்ளவும்.
* அதனை கடலைமாவு, மசாலா தூள், சிறிது எண்ணெய் சேர்த்து தடவி கொள்ளவும்.
* 180°C இல் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஏர் ஃப்ரையரில் வறுத்தால் சுவையான பாகற்காய் சிப்ஸ் தயாராகிவிடும்.
“இந்த முறையில் சாப்பிட்டால் பாகற்காயின் கசப்பு குறைந்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்” என டாக்டர் பால் கூறுகிறார்.
View this post on Instagram