Is bitter melon tea good for you: பொதுவாக கரேலா என்று அழைக்கப்படும் பாகற்காய் ஆனது நம்மில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் காய்கறிகளில் ஒன்றாக இருக்காது. ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், இந்த கசப்பான பாகற்காய் பலருக்கும் பிடிக்காது என்றாலும், இதை சாப்பிட பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இதை நேரடியாக அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
எனினும், சமைக்கும் போது புளிப்பு மற்றும் சுவையூட்டும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் அதை சுவையானதாக மாற்றி அதை சாப்பிடுகின்றனர். கரேலா அல்லது பாகற்காய், அதன் பிரபலமற்ற சுவையாக இருந்த போதிலும், அதன் ஏராளமாக நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களுக்காக, ஆரோக்கிய ஆர்வலர்களால் இன்னும் உயர்வாகக் கருதப்படுகிறது. இவை நமது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியமானவையாகும்.
பாகற்காய் தேநீர்
பாகற்காய், ஸ்மூத்திகள் மற்றும் பச்சை சாறுகள் ஆனது அவற்றின் ஊட்டச்சத்து சுயவிவரத்தை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது. இதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாக அதன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் அடங்குகிறது. மேலும் இதன் அற்புதமான நன்மைகளில் ஒன்று கல்லீரலை இயற்கையாகவே சுத்தப்படுத்துவதாகும். இது உடல் எடையிழப்பையும் ஆதரிக்கிறது. பாகற்காய் ஸ்மூத்திகளுக்குப் பதிலாக, பாகற்காய் தேநீர் குடிப்பது மற்றொரு சிறந்த வழியாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Effects of Bitter Gourd: தவறியும் பாகற்காயை இவர்கள் சாப்பிடவேக் கூடாது, மீறி சாப்பிட்டால்?
பாகற்காய் தேநீர் என்பது உலர்ந்த பாகற்காய் அல்லது பாகற்காய் துண்டுகளைத் தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் ஒரு மூலிகை பானமாகும். இது மருத்துவ தேநீராக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாகற்காய் தேநீர் ஒரு தூள் அல்லது சாறு வடிவில் கிடைக்கிறது. இது மிகவும் பிரபலமான பானமாக மட்டுமல்லாமல், அது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் பாகற்காய் தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
பாகற்காய் தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரையை சீராக்க
பாகற்காய் உட்கொள்வது பாரம்பரியமாகவே இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், நீரிழிவு நோயை நிர்வகிக்க ஒரு இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. எனவே இந்த தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்.
கல்லீரலை சுத்தப்படுத்த
பாகற்காய் டீ உட்கொள்வது கல்லீரலை நச்சு நீக்கி, குடலையும் சுத்தப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அஜீரணம் போன்ற பல்வேறு வயிறு கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
கொழுப்பைக் குறைக்க
பாகற்காய் தேநீர் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளே காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் எப்போது சாப்பிடக் கூடாது?நல்லதுதான் ஆனா இந்த நேரத்தில் தொட்டிங்க கெட்டிங்க!
கண்பார்வையை மேம்படுத்த
பாகற்காய் தேநீர் அல்லது கரேலா தேநீரில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவை பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். கண் பார்வையை மேம்படுத்தி, கண் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பாகற்காயில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
பாகற்காய் தேநீர் தயாரிப்பது எப்படி
வீட்டிலேயே எளிமையான முறையில் பாகற்காய் தேநீரைத் தயார் செய்யலாம்.
தேவையானவை
- உலர்ந்த அல்லது புதிய பாகற்காய் துண்டுகள்
- சிறிது தண்ணீர்
- தேன் (விரும்பினால்)
செய்யும் முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உலர்ந்த அல்லது நீரிழப்பு செய்யப்பட்ட கரேலா துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.
- இதில் பாகற்காயின் அனைத்து ஊட்டச்சத்துக்களும் தண்ணீரில் கசியும் வரை, அதை 10 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கொதிக்க விட வேண்டும்.
- பின்னர் தண்ணீரை அடுப்பிலிருந்து எடுத்து, பாகற்காய் துண்டுகளை இன்னும் சிறிது நேரம் அதில் ஊறவைக்க வேண்டும்.
- அதன் பிறகு, அந்த நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதில் சுவைக்காக சிறிது தேன் அல்லது பிற இனிப்புப் பொருளைச் சேர்த்து குடிக்கலாம்.
- எனினும், இதை முதன்மையாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உட்கொள்ளப்படுவதாக இருப்பின், இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையுமா? எப்படி சாப்பிடணும்?
Image Source: Freepik