Expert

இந்த ஜூஸ் காம்பினேஷன்ஸ் குடிச்சா ஆரோக்கியம் உறுதி.. நிபுணர் பரிந்துரை..

சில ஜூஸ்கள் உடலுக்கு நன்மை தரும், சில ஜூஸ்கள் கடுமையான பக்கவிளைவுகளை தரும். எந்த ஜூஸை குடிக்கலாம், எந்த ஜூஸை தவிர்க்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
இந்த ஜூஸ் காம்பினேஷன்ஸ் குடிச்சா ஆரோக்கியம் உறுதி.. நிபுணர் பரிந்துரை..

இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் ஜூசிங்-ஐ விரும்புகிறார்கள். ஆனால், எல்லா காய்கறிகளையும் பழங்களையும் ஜூஸாக அரைத்துப் பருக முடியாது. சில ஜூஸ் காம்பினேஷன்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் போது, சிலவை சிறுநீரக கற்கள், செரிமான சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஆயுர்வேதா நிபுணர் மற்றும் Gut Health Coach டிம்பிள் ஜாங்கடா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் பகிர்ந்த தகவல் இங்கே.


முக்கியமான குறிப்புகள்:-


குடிக்கக் கூடாதவை

முளைக்கீரை (Spinach)

முளைக்கீரை என்பது oxalates-ல் அதிகமாகக் காணப்படும் கீரை. இது உடலில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரகக் கற்களை (Kidney Stones) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இதை ஜூஸாகக் குடிக்க வேண்டாம். ஆனால் சூப்பாக தயாரித்தால், வெந்நீரில் blanched செய்யும் போது oxalates குறையும்.

கேல் (Kale)

முளைக்கீரையைப் போலவே கேல்-லும் oxalates அதிகம். ஜூஸாக அரைத்தால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படும். இதையும் சூப்பாகவே எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெஜிடபிள் ஜூஸ்.. ஹெர்பல் ஜூஸ்..  ஹெல்தியா? இல்லையா? டாக்டர் சொல்றத கேட்டு தெரிஞ்சிக்குங்க!

ஜூஸாகக் குடிக்கக் கூடியவை

வெள்ளைப் பூசணி (Ash Gourd)

செரிமானக் குழாயில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற மிகச் சிறந்த ஜூஸ். உடலை டிடாக்ஸ் செய்ய உதவும்.

வாழைத்தண்டு (Banana Stem)

இது எடை குறைக்க உதவும், மெட்டபாலிசம் வேகத்தை அதிகரிக்கும், சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்களை கரைக்க உதவும்

காரட் + பீட்ரூட் (Carrot + Beetroot)

இது பீட்டா கரோட்டின் நிறைந்தது. கல்லீரல் என்சைம்களைப் புதுப்பிக்கும், இரும்புச் சத்து மற்றும் ஃபோலேட் அதிகம். சிவப்பணுக்களை (RBC) உருவாக்க உதவும்.

ஆனால் பலர் ABC juice (Apple + Beetroot + Carrot) குடிப்பார்கள். ஆயுர்வேத விதிமுறைப்படி பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்து குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக ஆம்லா (நெல்லிக்காய்) சேர்த்துக் குடிக்கலாம்.

வெள்ளரிக்காய் (Cucumber Juice)

இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும். உடலை ஹைட்ரேட் செய்யும். இது ஒரு சிறந்த டிடாக்ஸ் ஜூஸ்.

கொத்தமல்லி + கறிவேப்பிலை (Cilantro + Parsley)

இது மிகவும் சக்திவாய்ந்த ஜூஸ். உடலில் இருக்கும் 85–95% வரை ஹெவி மெட்டல்ஸ் (காட்மியம், மெர்குரி, லீட்) போன்ற நச்சுகளை வெளியேற்றும். உடலில் ஹெவி மெட்டல் நச்சு இருந்தால், கொத்தமல்லி–கறிவேப்பிலை ஜூஸ் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

View this post on Instagram

A post shared by Dimple Jangda (@dimplejangdaofficial)

முக்கியமான அறிவுரை

* ஜூஸ் குடிக்கும் போது அளவு மீற வேண்டாம்

* ஒரே ஜூஸ் அடிக்கடி குடிக்காமல், மாற்றி மாற்றிக் குடிக்கவும்

* ஜூஸை எப்போதும் புதியதாக தயாரித்து உடனே குடிக்க வேண்டும்

இறுதியாக..

ஜூஸிங் என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த வழி. ஆனால், எல்லாவற்றையும் ஜூஸாகக் குடிக்கக்கூடாது. ஆயுர்வேத நிபுணர்கள் கூறும் விதிமுறைகளைப் பின்பற்றினால், ஜூஸ் உண்மையில் மருந்தாகப் பயன்படும். ஆரோக்கியத்தையும், கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் காப்பதற்கு சரியான ஜூஸ்களைத் தேர்வு செய்வது அவசியம்.

{Disclaimer: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆயுர்வேத மற்றும் ஆரோக்கிய வழிகாட்டுதல்கள் மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையல்ல. உடல்நிலை பிரச்சனைகள் இருந்தால், மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.}

Read Next

கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுக்கும் 4 சிற்றுண்டி வகைகள்.. நிபுணர் பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்