Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Doctor Verified

இந்த ஜூஸ் மட்டும் போதும்.. சருமம் ஜொலிக்கும்.! கல்லீரல் ஆரோக்கியமாகும்.! மருத்துவர் பரிந்துரை..

ABC Juice (Apple, Beetroot, Carrot) கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் சரும பிரகாசத்துக்கு சிறந்த ஜூஸ் என டாக்டர் ஷர்மிகா பரிந்துரை. எப்படிச் செய்யலாம்? எந்த நன்மைகள்? இங்கே முழு தகவல்.

டெய்ஸி மருத்துவமனை (Daisy Hospital) யூடியூப் சேனலில் பேசிய டாக்டர் ஷர்மிகா, கல்லீரல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்காக சிறந்த ஒரு இயற்கை ஜூஸை பரிந்துரைத்துள்ளார். அது ABC ஜூஸ் – ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ். “ABC ஜூஸ் குடிப்பது லிவருக்கும், ஸ்கின்னுக்கும் பிடித்த ஜூஸ். தினசரி குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சுவையும் ரொம்ப செம்மையாக இருக்கும்” என்கிறார் டாக்டர் ஷர்மிகா.

Video Link: https://youtu.be/nfqLfW0pJnc

ABC ஜூஸ் எப்படி தயாரிக்கலாம்?

டாக்டர் ஷர்மிகா கூறிய முறையைப் பார்த்தால்:

* அளவு: 1 ஆப்பிள், 2 கேரட், 1 பீட்ரூட்.

* இவற்றை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஆப்பிளை தனியாக அரைக்கவும். கேரட், பீட்ரூட்டை சேர்த்து அரைக்கவும்.

* அரைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ஜூஸ் பரவலாக வரும்.

* அரைத்த பிறகு சுத்தமான துணியில் வடிகட்டவும்.

* சுவை அதிகரிக்க இஞ்சி சேர்க்கலாம்.

* சளி, ஆஸ்துமா உள்ளவர்கள் ஃபிரிட்ஜில் வைத்த பழங்கள் பயன்படுத்தாமல் நேரடியாக அரைத்துச் சாப்பிட வேண்டும்.

* மாற்றத்துக்காக கருவேப்பிலை, கொத்தமல்லி, நெல்லிக்காய் சிறிதளவு சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சோடா பானங்களை விடுங்கள்! கல்லீரலை காப்பாற்றும் 8 ஆரோக்கியமான பானங்கள் – AIIMS டாக்டரின் பரிந்துரை..

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள்

கல்லீரல் சுத்தம் & ஆரோக்கியம்

பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை சுத்தம் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகின்றன. கல்லீரல் செயல்பாடு மேம்பட்டு, உடல் சக்தி அதிகரிக்கும்.

சரும பிரகாசம்

ஆப்பிள் & கேரட்டில் உள்ள வைட்டமின் A, C சருமத்திற்கு ஒளிவீசும் தோற்றத்தை தருகிறது. சரும பிம்பிள், முகப்பரு குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

ABC ஜூஸில் உள்ள பைட்டோநியூட்ரியன்ட்ஸ், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

உடல் எடை கட்டுப்பாடு

குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைவாக உணரச் செய்து, எடை குறைக்க உதவுகிறது.

சுவாச நோய்களுக்கு ஆதரவாக

வீசிங், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தினசரி குடிப்பது சுவாசக் குழாய்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

மருத்துவர் பரிந்துரை

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் லிவருக்கும் ஸ்கின்னுக்கும் பிடித்த ஜூஸ். இதை தினமும் குடித்து பாருங்கள். உடலின் உள்ளார்ந்த ஆரோக்கியம் மேம்பட்டால் சருமம் இயல்பாக ஜொலிக்கும்.

இறுதியாக..

ABC ஜூஸ் (ஆப்பிள், பீட்ரூட், கேரட்) என்பது இயற்கையான டிடாக்ஸ் பானம். கல்லீரலை சுத்தம் செய்து, சருமத்திற்கு இயற்கையான ஒளிவீச்சை தருகிறது. டாக்டர் ஷர்மிகா பரிந்துரிப்பது போல, இதை தினசரி குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டும் மேம்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனையின் மாற்றாகக் கருதப்படக்கூடாது. உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

40 வயதில் எடையைக் குறைக்க முடியலனு கவலையா? இந்த 6 குறிப்புகளை பின்பற்றுங்க.. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 03, 2025 17:07 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content