Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Expert

40 வயதில் எடையைக் குறைக்க முடியலனு கவலையா? இந்த 6 குறிப்புகளை பின்பற்றுங்க.. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

40 வயதுடையவராக இருந்தால், பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள், வலிகளைச் சந்திக்கின்றனர். ஆனால், இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் 40 வயதில் எடையைக் குறைக்கவும், ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தியயும் மேம்படுத்தவும் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். பொதுவாக, உடல் எடை அதிகரிப்பு இன்று பல நாள்பட்ட பிரச்சனைகளுக்குப் பொதுவான காரணமாக அமைகிறது. அதிலும் இளம் வயது நபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களால் உடல் எடையைக் குறைக்க முயன்றாலும் சில வாழ்க்கைப் பழக்கங்கள் அவற்றைக் கடினமாக்குகின்றன. குறிப்பாக, 40 வயதுடைய நபர்களாக இருந்தால், அவர்கள் எளிதில் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுவர். ஆனால், அவர்களின் எடையிழப்பு முயற்சி பல சமயங்களில் தோல்வியைத் தருகிறது. இந்நிலையில், 40 வயதுடையவர்கள் உடல் எடை குறைப்பு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெற அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் சாதம் சாப்பிட்டே ஈஸியா எடையை குறைக்கலாம்... இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

இது குறித்து ஹார்மோன் மற்றும் குடல் சுகாதார பயிற்சியாளரான, ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் கல்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

40 வயதில் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள்

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, “40 வயதுடையவரா, உங்கள் கீழ் வயிறு, இடுப்பு மற்றும் தொடைகளைச் சுற்றி பிடிவாதமான கொழுப்பைக் கவனிக்கிறீர்களா?

இதற்கு மாதவிடாய் நின்ற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு சேமிப்பு முறைகளை மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நல்ல செய்தி என்னவெனில், அன்றாட வாழ்வில் சில வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்களைக் கையாள்வதன் மூலம் நாம் அதை மாற்ற முடியும். கொழுப்பைக் குறைக்கவும், தசையை வளர்க்கவும் மற்றும் 40 வயதிற்குப் பிறகு ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் 6 புத்திசாலித்தனமான மாற்றங்கள் இங்கே என தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

6 வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள் (விரைவான சுருக்கம்)

இரவு 8 மணிக்குப் பிறகு இரவு உணவு இல்லை

நிபுணர், இரவு 8 மணிக்குப் பிறகு இரவு உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கிறார். ஏனெனில், நல்ல தூக்கத்திற்கு மெலடோனின் அவசியமாகும். இவை இன்சுலின் தாளத்தை ஆதரிக்கவும் & கொழுப்பு சேமிப்பைக் குறைக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. எனவே, இரவு 8 மணிக்குப் பின் இரவு உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உணவுக்குப் பிறகு இனிப்புகள் இல்லை

உணவு உண்ட பிறகு இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர் கூறுகிறார். ஏனெனில், சாப்பிட்ட பிறகு இனிப்புகளைச் சாப்பிடுவது உடலில் கொழுப்பை அதிகரிக்கக்கூடும். மேலும் இது இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இவற்றைத் தவிர்க்க, உணவுக்குப் பிறகு இனிப்பு உட்கொள்ளலைத் தவிர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

சரியான நேரத்தில் உணவை உண்ணுவது

சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது இன்சுலினை நிலைப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் வீழ்ச்சிக்குப் பிறகு இன்சுலின் நிலைப்பாடு அவசியமாகும். எனவே, தினந்தோறும் சரியான நேரத்தில், போதுமான உணவை உட்கொள்வது உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க அரிசி சாப்பிடலாமா? இதன் நன்மைகள் இங்கே!

உணவில் நார்ச்சத்துக்கள் சேர்ப்பது

ஒவ்வொரு உணவிலும் நார்ச்சத்துக்களை சேர்க்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஈஸ்ட்ரோஜன் நச்சுத்தன்மையை ஊக்குவிக்கவும், இடுப்பு அல்லது தொடையில் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

தினமும் சமச்சீரான காலை உணவு

காலை உணவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் சமச்சீரான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.

மூலிகை தேநீர் உட்கொள்வது

இரவில் கெமோமில் தேநீர் மற்றும் மதிய உணவுக்குப் பிறகு பெப்பர்மின்ட் டீ உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது குடல் இயக்கத்தை ஆதரிக்கவும், ஹார்மோன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: எடை மடமடனு வேகமாக குறைய இந்த இரண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் போதும்

Image Source: Freepik

Read Next

சோடா பானங்களை விடுங்கள்! கல்லீரலை காப்பாற்றும் 8 ஆரோக்கியமான பானங்கள் – AIIMS டாக்டரின் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 03, 2025 15:47 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content