Expert

ஜூஸை குடிப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய விதிகள்.. நிபுணர் பரிந்துரை..

ஜூஸை தவறான முறையில் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஜூஸில் இருந்து முழு ஊட்டச்சத்தைப் பெற, நீங்கள் பின்பற்ற வேண்டிய 3 முக்கிய விதிகள் நிபுணர் பகிர்ந்துள்ளார். 
  • SHARE
  • FOLLOW
ஜூஸை குடிப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய விதிகள்.. நிபுணர் பரிந்துரை..


செயற்கை பானங்களை விட இயற்கையான பழங்கள், காய்கறிகள் எப்போதுமே உடலுக்கு நன்மை தருவதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், பலர் ஜூஸை தயாரித்தவுடன் உடனே குடிப்பதற்குப் பதிலாக நேரம் தாழ்த்திப் பருகுவது வழக்கமாக உள்ளது.

உடலில் இருந்து நச்சுகளை நீக்கவும், முழுமையான ஊட்டச்சத்துக்களைப் பெறவும் ஜூஸை சரியான முறையில் பருகுவது அவசியம் என்று ஆயுர்வேதம் மற்றும் குடல் சுகாதாரத்திற்கான பயிற்சியாளர் டிம்பிள் ஜங்டா கூறுகிறார்.

மேலும் அனைத்து ஜூஸ்களும் உடலுக்கு நன்மை செய்யாது. சில தவறான முறைகள் சர்க்கரை அதிகரிப்பு, செரிமான சிக்கல், சிறுநீரக கற்கள் போன்ற அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று டிம்பிள் குறிப்பிட்டார்.

ஜூஸ் பருகும் போது பின்பற்ற வேண்டிய 3 முக்கிய விதிகள்

கீரை + பழச்சாறு சேர்க்காதீர்கள்

கீரை வகைகள் (spinach, kale) அதிகமாக ஆக்சலேட்டுகள் கொண்டுள்ளன. இது உடலின் கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயம் அதிகம். அதற்குப் பதிலாக வெள்ளரி, பூசணி மற்றும் செலரி போன்ற காய்கறிகளைச் சேர்த்து ஜூஸ் தயாரிக்கலாம். இது வீக்கம் குறைக்கவும் நச்சுகளை நீக்கவும் உதவும்.

பழங்களை ஜூஸ் செய்யாமல் அப்படியே சாப்பிடுங்கள்

பழங்களில் உள்ள சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிகமாகச் சுரந்தால், இரத்த சர்க்கரையில் திடீர் உயர்வு ஏற்படும். இது டைப்–2 நீரிழிவு, உடல் பருமன், எடை அதிகரிப்பு அபாயத்தை ஏற்படுத்தும். பழங்களை முழுமையாக சாப்பிடுவது தான் சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: புறக்கணிக்கக் கூடாத 8 கொடிய பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்.!

கடையில் வாங்கும் ஜூஸ்களுக்கு 'நோ' சொல்லுங்கள்

‘ஆர்கானிக்’ என்று பெயர் வைத்தாலும், கடையில் கிடைக்கும் ஜூஸ்களில் பெரும்பாலும் பாதுகாப்பு வேதிப்பொருட்கள், செயற்கை நிறங்கள், சர்க்கரை கலந்து இருக்கும். இது சோடாவைப் போலவே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

View this post on Instagram

A post shared by Dimple Jangda (@dimplejangdaofficial)

சரியான வழிகள்..

* வீட்டிலேயே புதிய பழங்கள், காய்கறிகளால் ஜூஸ் தயாரிக்கவும்.

* தயாரித்தவுடன் உடனே, குறிப்பாக வெறும் வயிற்றில் காலை நேரத்தில் குடிக்கவும்.

* நாள் முழுவதும் அடிக்கடி தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருங்கள்.

* மாலை 5 மணிக்குள் ஜூஸை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு ஜூஸ் குடித்தால், உடலின் நச்சுகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, இயற்கையான எரிசக்தி கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல் மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள், குறிப்புகள் மற்றும் தகவல்கள் மருத்துவர்களின் அல்லது ஆரோக்கிய நிபுணர்களின் நேரடி பரிந்துரைக்குப் பதிலாக கருதப்படக்கூடாது. உங்கள் உடல் நிலை, ஆரோக்கிய பிரச்சினைகள் அல்லது தனிப்பட்ட தேவைகள் தொடர்பாக எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளும் முன் தகுதியான மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

ஒன்றல்ல.. இரண்டல்ல.. பல நன்மைகளை அள்ளித் தரும் சிவப்பு நிற உணவுகள்! இத நீங்க கட்டாயம் உங்க டயட்ல சேர்க்கணும்

Disclaimer

குறிச்சொற்கள்