$
Symptoms of New born Jaundice: புதிதாக பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் மஞ்சள் காமாலை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பிறந்து ஐந்து நாள்களே ஆன குழந்தைகளை மஞ்சள் காமாலை நோய் அதிகம் தாக்குகிறது. மஞ்சள் காமாலையின் பொதுவான அறிகுறி கண்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது ஆகும். இது கல்லீரல் அல்லது இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் அடிப்படை சிக்கலைக் குறிப்பதாகும். இது பொதுவான நிலை மற்றும் சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அதிக அளவிலான பிலிரூபின் மூளை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை உண்டாவதற்கான ஆபத்து மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் பற்றி டாக்டர் அம்ரித் துதேஜா, அசோசியே கன்சல்டன்ட் – நியோனாட்டாலஜி, மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பட்பர்கஞ்ச் விவரித்துள்ளார்.
பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதை கண்கள், தோல் மற்றும் சளி சவ்வுகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதைக் குறிக்கிறது. உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் முறிவின் போது மஞ்சள் நிறமியான பிலிரூபின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் அதிகப்படியான குவிப்பு காரணமாகவே மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடிப்படை கல்லீரல் அல்லது பிற மருத்துவ நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
குழந்தை பிறந்த முதல் சில நாள்களிலேயே மஞ்சள் காமாலை தோன்றும். குறிப்பாக முதல் வாரத்தில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். இதில் பிறந்த குழந்தையின் கல்லீரலின் தற்காலிக இயலாமையால், பிலிரூபனைச் செயல்படுத்தி அகற்றுவது மூலம் கண்கள், தோல் போன்றவை மஞ்சள் நிறமாக மாறும். பொதுவாக குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள், குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை மருத்துவர் கண்காணிக்கப்பட வேண்டும். இதில், குழந்தையின் கல்லீரல் முதிர்ச்சையடையும் போது பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை தானாகவே நீங்கி விடும். சில சந்தர்ப்பங்களிலேயே மருத்துவ ஆலோசனை தேவைப்படலாம்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் கருத்துப் படி, ஒவ்வொரு 10 குழந்தைகளில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை உண்டாகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும், 10 குழந்தைகளில் 8 பேர் குறைமாதத்தில் அதாவது கர்ப்பத்தின் 37 ஆவது வாரத்திற்கு முன் பிறந்தவர்கள் ஆவர்.

இந்த பதிவும் உதவலாம்: குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!
பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை அறிகுறிகள்
புதிதாக பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பின், அது பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. சருமம் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவதற்கும், மஞ்சள் காமாலையே காரணமாகும். சருமத்தில் மஞ்சள் நிறம் தோன்றுதல் பின்வரும் பகுதிகளில் ஏற்படலாம்.
- உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மஞ்சள் நிறம்
- கண்களின் வெண்மையில்
- தலை, முகம் மற்றும் வாய்ப்பகுதியில்
மற்ற அறிகுறிகளாவன
- அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
- அதிக தூக்கம்
- வெளிர் மலம்
மேலே குறிப்பிட்டதன் படி, குழந்தையின் உள்ளங்கால் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. இதில், மஞ்சள் காமாலையின் மதிப்பு அதிகமாக இருப்பின், அதாவது 25 mg/dl-க்கு அதிகமாக, இருந்தால், பிலிரூபின் நிறமி மூளையை அடைந்து, படியும் இடத்தில் தீங்கு விளைவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: புதிதாகப் பிறந்த குழந்தை வாந்தி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலையை தடுக்கும் நடவடிக்கைகள்
பிறந்த குழந்தையின் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை ஒளிக்கதிர் சிகிச்சை ஆகும். இது எளிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். இவை, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்காது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தால் இரத்தத்தை மாற்ற வேண்டும்.
தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான இரத்த குழு வேறுபாடு அல்லது செபலோஹெமடோமா என்ற உச்சந்தலையில் இரத்த சேகரிப்பு போன்ற பிற காரணங்களால் தடுக்கக் கூடியவற்றை செய்ய முடியாது. மேலும், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையைத் தடுக்குமாறு போதுமான உணவுகளை அளிப்பதே சாத்தியமாகும்.
எப்போது அவசர உதவியை நாடலாம்
CDC-ன் கருத்துப் படி, குழந்தை கீழ்க்காணும் அறிகுறிகளைக் கொண்டிருப்பின், அவசர மருத்துவ உதவியைப் பெறுவது நல்லது.
- கடினமான, நெகிழ்வான அல்லது தளர்வான உடலைக் கொண்டிருக்கும் போது
- வித்தியாசமான கண் அசைவுகள்
- அதிக சத்தத்துடன் அழுகுதல்
- உடல் வில் போல அமைந்திருக்கும். அதாவது, உடல் முன்னோக்கியும், தலை அல்லது கழுத்துப் பகுதியும் மற்றும் குதிகாலும் பின்னோக்கி வளைந்திருப்பது.
மஞ்சள் காமாலைக்கு இயற்கை தீர்வாக, குழந்தையை சூரிய ஒளியில் வைத்திருப்பது என நம்புகின்றனர். எனினும், குழந்தைகளுக்கு இந்த உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!
Image Source: Freepik