$
Surya Kiran Passed Away Due To Jaundice: திரைப்பட நடிகரும் இயக்குனருமான சூர்யா கிரண் மஞ்சள் காமாலை காரணமாக சென்னையில் இன்று (11/03/2024) காலமானார். இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இவருக்கு வயது 48. இவரது மறைவுக்கு திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா கிரண் மறைவுக்கு மஞ்சள் காமாலை தான் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இவர் உயிரிழந்தார்.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பலரும் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் சிலர் உயிரிழக்கிறார்கள். இதில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் எனப்தை இங்கே காண்போம்.
இதையும் படிங்க: Treatment of Jaundice: மஞ்சள் காமாலை குணமாக எவ்வளவு காலம் ஆகும்?
மஞ்சள் காமாலையை தடுப்பது எப்படி? (how to prevent jaundice)
- சரிவிகித உணவு உண்ணுதல்
- தொடர்ந்து உடற்பயிற்சி
- இரசாயனங்கள் மற்றும் பிற மூலங்களிலிருந்து விலகி இருத்தல்
- மருந்துகளை கவனமாக நிர்வகித்தல்
- சுகாதார நிபுணரிடம் ஆலோசிக்காமல் மூலிகை மருந்துகளை எடுக்க வேண்டாம்
- புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் நரம்பு வழி மருந்துகளை தவிர்த்தல்
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது
- பயணத்திற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெறுதல்
மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றினாலே போதும். மஞ்சள் காமாலை நோயில் இருந்து உங்களை காத்துக்கொள்ளலாம்.

மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் (Jaundice Symptoms)
- தோல், மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
- வெளிர் மலம்
- இருண்ட சிறுநீர்
- அரிப்பு
- சோர்வு
- வயிற்று வலி
- எடை இழப்பு
- வாந்தி
- காய்ச்சல்
மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை சந்தித்தால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகவும்.