தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மதன் பாப் (Madhan Bob) அவர்கள் 71-வது வயதில் காலமானார். புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (Aug 2) உயிரிழந்தார்.
மதன் பாப் அவர்கள், 90-களில் தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, ‘அஜீத்’, ‘விஜய்’, ‘விக்ரம்’ போன்ற முன்னணி நடிகர்களுடன் பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். அவருடைய தனிச்சிறப்பு பாணியில் வந்த முகபாவனைகள், குரல் மற்றும் நகைச்சுவை timing, அவரை ரசிகர்களிடையே பெரும் புகழுக்கு உள்ளாக்கியது.
‘கண்ணுக்குள் நிலவு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பிரியமான தோழி’, ‘ஜென்டில்மேன்’, ‘வசூல் ராஜா MBBS’, ‘தில்லு முல்லு 2’, போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் சமூக வலைதளங்களில் தனது இறுதி அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.