மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு

பிரபல மலையாள நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது சினிமா பயணம், சாதனைகள் மற்றும் திரையுலக இரங்கல்கள்.
  • SHARE
  • FOLLOW
மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு

மலையாள திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதான அவர், எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) உயிரிழந்தார்.


முக்கியமான குறிப்புகள்:-


குடும்பம்

ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், மலையாளத்தில் முன்னணி இயக்குநர்–நடிகராக அறியப்படும் வினீத் ஸ்ரீனிவாசன் என்ற மூத்த மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற இளைய மகனும் உள்ளனர்.

இரங்கல்கள்

ஸ்ரீனிவாசனின் மறைவுச் செய்தி வெளியாகியதை அடுத்து, மலையாள திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். “மலையாள சினிமாவின் மனசாட்சி” என்று பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

artical  - 2025-12-20T104831.374

சினிமா பயணம் – ஒரு சுருக்கம்

  • 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிப்பு
  • பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை, வசனம்
  • ‘வடக்கினோக்கியந்திரம்’, ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமளா’ உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களின் இயக்குநர்
  • 6 முறை கேரள மாநில திரைப்பட விருது
  • 48 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கை
  • காமெடி கலந்து சமூக விமர்சனத்துடன் திரைக்கதை எழுதுவதில் வல்லவர்

மோகன்லால் உடன் பல படங்களில் நடித்துள்ள அவர், மகன் வினீத் ஸ்ரீனிவாசனுடனும் திரையில் தோன்றியது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவிலும் தடம்

ஸ்ரீனிவாசன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘லேசா லேசா’, ‘புள்ளகுட்டிக்காரன்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, எழுத்து, இயக்கம் என பல தளங்களில் மலையாள சினிமாவுக்கு பெரும் பங்களிப்பை செய்த ஸ்ரீனிவாசனின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது. அவரது படைப்புகள் மூலம் அவர் ரசிகர்களின் மனங்களில் என்றும் வாழ்வார்.

Read Next

இனிப்பை விட உப்பே ஆபத்து! – மருத்துவர் சிவராமன் கடும் எச்சரிக்கை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 20, 2025 10:49 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்