Fri Sep 11, 2026 | 11:44 PM IST

Doctor Verified

இனிப்பை விட உப்பே ஆபத்து! – மருத்துவர் சிவராமன் கடும் எச்சரிக்கை

இனிப்பை விட உப்பு அதிக ஆபத்தானது என மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை. தினமும் எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு உடலுக்கு தரும் பாதிப்புகள் என்ன? முழு விளக்கம் இந்த செய்தியில்.

இனிப்பை விட உப்பே உடலுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என பிரபல மருத்துவர் டாக்டர் சிவராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீப காலமாக மக்கள் இனிப்பின் பயன்பாட்டை ஓரளவு குறைத்தாலும், உப்பு பயன்பாட்டில் தேவையான கட்டுப்பாடு இன்னும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான உப்பின் அளவு 4 கிராம் மட்டுமே. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் நாம் தினமும் 10 கிராம் வரை உப்பை உணவின் மூலம் எடுத்துக் கொள்கிறோம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு கிலோ உப்பு பாக்கெட்டை வாங்கினால், அது ஒரே மாதத்தில் காலியாகிவிடுகிறது. இது நம்மிடையே உப்பு பயன்பாடு எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Source: https://youtu.be/qRWRV1NuRsE

உப்பு – பல நோய்களுக்கு அடிப்படை காரணம்

அதிக அளவு உப்பு சாப்பிடுவது:

  • இரத்தக் கொதிப்பு
  • இரத்த அழுத்தம்
  • இருதய நோய்
  • சிறுநீரக பாதிப்பு

போன்ற பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக வீட்டில் தந்தைக்கு இரத்தக் கொதிப்பு அல்லது தாய்க்கு இதய நோய் இருந்தால், அவர்களது குழந்தைகளும் உப்பு உட்கொள்ளும் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: உப்பில் இத்தனை வகை இருக்கா? எந்தெந்த பிரச்சனைகளுக்கு என்ன வகையான உப்பு உதவும்.. நிபுணர் தரும் விளக்கம்

நோய் இல்லையென்றாலும் உப்பு குறைக்க வேண்டும்

நமக்கு தற்போது இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இல்லை என்பதற்காக உப்பை கட்டுப்பாடின்றி சாப்பிடக்கூடாது. நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்கு உப்பு குறைப்பு மிகவும் அவசியம் என மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.

“உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார். ஒருவன் அதிகமாக வியர்வை சிந்தும் அளவிற்கு கடுமையான உடல் உழைப்பு செய்யவில்லை என்றால், அவனுக்கு கூடுதல் உப்பு தேவையில்லை என்பதே அந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என விளக்குகிறார்.

இறுதியாக..

ஆரோக்கியமான, நீண்ட நாள் வாழ்க்கை வாழ விரும்பினால், இனிப்பை மட்டும் குறைப்பது போதாது. தினசரி உணவில் உப்பு பயன்பாட்டையும் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் செய்யும் சிறிய மாற்றமே எதிர்காலத்தில் பெரிய நோய்களைத் தவிர்க்க உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொது விழிப்புணர்விற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால், உணவு முறையில் மாற்றம் செய்யும் முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

உடலிலிருந்து வரும் இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. மருத்துவர் தரும் அறிவுரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 19, 2025 22:43 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content