
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலரும் பல்வேறு நோய் அபாயங்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும், இளம் வயதிலேயே மரணத்தை சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறு, திரைப்படத்துறையில் இருக்கும் பலரும் சமீபத்தில் தொடர்ந்து பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதையும், அதனால் சிலர் மரணமடைந்து வருவதையும் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த வரிசையில் தற்போது துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபினய் அவர்கள் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இவருக்குப் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்லீரல் நோய்
சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் சிகிச்சைக்காக நிதி உதவி கோரி வீடியோ வெளியிட்டார். அவருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், KPY பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்து செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.
இந்த பதிவும் உதவலாம்: லிவர் சீக்கிரம் சரியாகணுமா? இந்த 6 உணவுகளை உங்க டயட்ல கட்டாயம் சேர்க்கணும்.. நிபுணர் தரும் டிப்ஸ்
இந்நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல், மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டபோது, அவருக்கு உதவும் வகையில் மற்ற நடிகர்கள் அவருக்கு உதவினர். இது குறித்த காட்சிகளின் போது பதிவான வீடியோவில், அபிநய் மிகவும் உருக்கமாக, "எனக்கு ஒன்றரை வருஷம்தான் நேரம் கொடுத்ததாகவும், தான் விரைவில் போய்விடுவேன் என்றும்" கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் திறமையாககலைஞர்களில் ஒருவரான இவர், உடல்நல பாதிப்பு மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சவால்களைச் சந்தித்து, தானே தனது மரண காலத்தை நிர்ணயித்து பேசி வெளிவந்த வீடியோ, ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
44 வயதான அபிநய், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த வீடியோவில் தானே சொன்னது போலவே, உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 4 மணிக்குக் காலமானார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், ஒரு திறமையானக் கலைஞர் தனது இளம் வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தது ஒட்டுமொத்தச் சினிமாவையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளம் வயதில் கல்லீரல் நோய் வருவதற்கான காரணங்கள்
இந்தியாவில் கல்லீரல் நோயைப் பொறுத்த வரை, மது சார்பற்ற கொழுப்பு கல்லீரல் நோயும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. இவை குறைவாகவோ அல்லது மது அருந்தாமலோ இருப்பவர்களுக்கு ஏற்படும்போது, அது NAFLD என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏன் அதிகரித்து வருகிறது என்பது குறித்து மும்பையின் இந்துஜா மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பவன் தோப்ளே பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலை ஆரோக்கியமாக்கவும், உடலை நச்சு நீக்கவும் உதவும் 3 சிறந்த யுக்திகள்.. நிபுணர் விளக்கம்
உணவுமுறை மாற்றங்கள்
இந்தியர்களின் உணவுப் பழக்கம் கணிசமாக மாறிவிட்டது. அதிலும், அதிக கலோரி, அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அதிகரித்துள்ளது. அதன் படி, சர்க்கரை நிறைந்த உணவு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கல்லீரலில் கொழுப்பு குவிவதற்கு பங்களிக்கின்றன.
உட்கார்ந்த வாழ்க்கை முறை
மேசையில் வேலை செய்வது, முடிவில்லாத திரை நேரம், உடல் செயல்பாடு இல்லாதது போன்றவை கல்லீரல் கொழுப்பு நோய்க்குக் காரணமாகும். ஏனெனில், உடல் செயல்பாடுகளின் உதவியுடன் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்கலாம். சிறிது அல்லது அசையாமல் இருப்பது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு எளிதில் வழிவகுக்கிறது.
உடல் பருமன்
உடல் பருமன் பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகளுடன் தொடர்புடையதாகும். இது கூட்டாக வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. இது NAFLD க்கு உள்ளாக்குகிறது.
மரபணு முன்கணிப்பு
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்த பிறகும், மரபணு காரணிகளின் காரணமாக சிலருக்கு கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து கூட கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலை தடுக்கும் உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 10, 2025 14:11 IST
Published By : கௌதமி சுப்ரமணி