Who is Angry Rantman: கடந்த சில காலமாக இளைஞர்களின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில், ஆங்கிரி ராண்ட்மேன் (Angry Rantman) என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அப்ரதீப் சாஹா (Abhradeep Saha) தனது 27வது வயதில் பரிதாபமாக காலமானார்.
அவர் கடந்த மாதம் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதிலிருந்து மருத்துவமனையின் கண்காணிப்பில் இருந்தார். அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சித்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 16 அன்று அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம் : Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்
அவர் இறந்ததற்கான சரியான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் எனவும், இது உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுத்ததாகவும் ஊடகங்கள் கூறுகிறது.
யார் இந்த ஆங்கிரி ரான்ட்மேன்

Angry Rantman தனது உரத்த குரலில் சினிமா விமர்சனங்கள் செய்து வரும் திரைப்பட விமர்சகர். இது தவிர இவர் விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்து தொடர்பான அவரது உள்ளடக்கத்திற்காக நன்கு அறியப்பட்டவர் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் ஒரு பெரிய பாலோவர்களை கொண்டுள்ளார். பிப்ரவரி 19, 1996 இல் பிறந்த அவர், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மற்றும் YouTube இல் 481k சந்தாதாரர்களையும், Instagram இல் 119k பின்தொடர்பவர்களையும் பெற்றுள்ளார்.
ஆங்கிரி ரான்ட்மேன் மரணத்திற்கு என்ன காரணம்?
அப்ரதீப் சஹா அல்லது ஆங்கிரி ரான்ட்மேன் பெங்களூரில் உள்ள நாராயண் இதய நோய் மையத்தில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது, இறுதியில் அவரது அகால மரணத்திற்கு வழிவகுத்தது.
இந்த பதிவும் உதவலாம் : Heart disease: இந்த இரண்டு உடற்பயிற்சிகளை செய்தால் போதும் வாழ்க்கையில் இதய நோயே வராதாம்!!
அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் சமீபத்திய அப்டேட்ட்கள், ஆங்ரி ராண்ட்மேன் ஒரு குறிப்பிடத்தக்க இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிப்படுத்தியது. அவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு ஒரு அப்டேட் ஐ பகிர்ந்து கொண்டார். அப்ரதீப் இன்னும் ஐசியுவில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மோசமான நிலைமையை வெளிப்படுத்தியது, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உயிர்காக்கும் ஆதரவு அமைப்புகளை நம்பியிருப்பதாகவும் கூறியுள்ளார். மருத்துவ நிபுணர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், பிரபலமான யூடியூபரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இந்த பதிவும் உதவலாம் : Juicing for Healthy Heart: உங்க இதயம் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க தினமும் இந்த ஜூஸை குடியுங்க!!
உடல் உறுப்புகள் செயலிழப்பு என்பது என்ன?
நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானது. அவை ஒவ்வொன்றும் அதன் தனி செயல்பாட்டுக்கு பெயர் பெற்றது. ஒரு உறுப்பு சாதாரணமாக செயல்படும் திறனை இழந்து வெளிப்புற தலையீடு தேவைப்படும்போது அது உறுப்பு செயலிழப்பு என்கிறோம்.
Pic Courtesy: Freepik