புற்றுநோய்க்கு சிகிச்சை:
81 வயதான பாடகர் ஜெயச்சந்திரன் சில காலமாக புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் திடீரென மயங்கி விழுந்த ஜெயச்சந்திரனை குடும்பத்தினர் உடனடியாக அவரை திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 9ம் தேதி இரவு 7.55 மணிக்கு காலமானார்.
காதல் தோல்வி, பிரிவு என சோக கீதத்தையும் மனதை வருடும் இன்னிசையாக மாற்றிய மெலோடி மன்னன் ஜெயச்சந்திரனின் மறைவு இசையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இறுதிச்சடங்கு:
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ள ஜெயச்சந்திரனின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பூங்குன்னத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்படும். பின்னர் உடல் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை கேரள சங்கீத நாடக அகாடமியில் வைக்கப்படும். சனிக்கிழமை சேந்தமங்கலத்தில் உள்ள பாலியாத் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, கேரள அரசின் 5 திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜேசி டேனியல் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகிய உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். ‘வசந்த கால நதிகளிலே’, ‘மாஞ்சோலை கிளி தானோ’, ‘ ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, ‘பூவை எடுத்து ஒரு மாலை’, ’இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’ உள்ளிட்ட மனதை வருடும் மெல்லிசை பாடல்களை பாடல்களை பாடியுள்ளார்.