$
How swallowing dry ice can pose severe health risk: அலட்சியத்தால் சிலரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் பதட்டப்பட வைத்துள்ளது. குருகிராமில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்ட பிறகு, அங்கு பணிபுரிந்த பணியாள் மவுத் ப்ரெஷ்னருக்கு பதிலாக தவறுதலாக ட்ரை ஐஸை கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்து உள்ளனர். இரத்த வாந்தியை நிறுத்த வாயை கழுவ முயன்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் ஒருவருக்கு ஆபத்தில்லை என்றாலும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தவறு செய்த பணியாளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ட்ரை ஐஸ் என்பது என்ன? அதை சாப்பிட்டால் என்னவாகும், இதன் தீமைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Early Periods Reason: 8 வயதிலேயே பருவமடைய என்ன காரணம்?
ட்ரை ஐஸ் என்பது என்ன?

அறிவியல் ரீதியாக CO2 என அழைக்கப்படும் ட்ரை ஐஸ் உலர்ந்த பனியைப் போன்றது. ஆனால், அது பனியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த பனிக்கட்டி திடமான கார்பன் டை ஆக்சைடு உதவியுடன் செய்யப்படுகிறது. அதாவது, மைனஸ் 78.5°C (-109.3°F) வெப்பநிலையில் உள்ள திட கார்பன் டை ஆக்ஸைடையே ட்ரை ஐஸ் கட்டி.
இந்த பனியை வாயில் போடும் போது, அது உருகாமல், கார்பன் டை ஆக்சைடு வாயு வடிவில் விரிவடைகிறது. இதனால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். இதன் பயங்கரமான குளிர்ச்சித்தன்மை காரணமாக, இவை பொதுவாக போட்டோஷூட் அல்லது உணவுத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.
தவறுதலாக Dry ice-ஐ சாப்பிடால் என்னவாகும்?
ட்ரை ஐஸ் சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தாக மாறும். இது திட நிலை கார்பன் டை ஆக்ஸைடு என்பதால், இதை உட்கொள்வதால் உடல் உறுப்புகளுக்குள் கடுமையான காயங்கள் ஏற்படும். நமது வாய்ப் பகுதியில் அல்லது செரிமானப் பாதையில் இது பட்டால், அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்களை வெளியேற்றும்.
இதனால், செரிமான அமைப்பில் ஆபத்தான வாயுக்கள் அதிகமாகி ஆக்ஸிஜன் அளவு குறைந்து வயிறு உப்புசம், வயிறு அல்லது குடல் வலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். ஒருவேளை யாராவது ட்ரை ஐஸ்-யை தவறுதலாக சாபிட்டால், அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
இந்த பதிவும் உதவலாம் : Blood Pressure: மக்களே கவனம்.. இந்த உணவுகள் BP-யை வேகமாக அதிகரிக்கும்!!
ட்ரை ஐஸ் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்து?

- ட்ரை ஐஸ் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- இதை சாப்பிடுவது அல்லது அதனுடன் தொடர்பு கொண்டால் தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- இந்த பனிக்கட்டியை நாம் சாப்பிட்டால், கோமா நிலைக்குச் சென்று இறக்கக்கூடும்.
- சாப்பிடுவது அல்லது அதனுடன் தொடர்பு கொள்வது சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும் இவை, செல்களை சேதப்படுத்தும்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version