Baby Skin Color: ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கும் போதெல்லாம் குழந்தையைப் பார்த்தவுடனேயே அதன் அம்சங்களையும், நிறத்தையும் பார்த்து அது அம்மாவைப் போலவா தந்தையைப் போலவா என தாய்வழி, தந்தைவழி உறவுகளை போலவா என யூகிக்கத் தொடங்குவார்கள். இதுதவிர குழந்தையின் நிறத்தை கவனிக்காதவர்கள் மிக சொர்ப்பம்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் நிறம் பிரகாசமாக தோற்றமளிக்கிறது. ஆனால் காலப்போக்கில் அதன் நிறம் கருமையாக மாறத் தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள் மற்றும் குழந்தையை வெள்ளையாக மாற்ற பல வழிகளை கடைபிடிக்கத் தொடங்குகிறார்கள். குழந்தையின் நிறம் மாற என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர் கவுரவ் குமார் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
பிறந்த பிறகு குழந்தையின் நிறம் கருமையாக மாறுமா?

குழந்தை பிறந்த உடன் அதன் நிறம் மாறுவதை பார்த்து சில பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். குழந்தை பிறந்து அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குப் பிறகு குழந்தையின் நிறம் மாறத் தொடங்குகிறது.
குழந்தை இப்படி நிறம் மாறுவதை குழந்தையின் பலவீனம் போன்ற பல காரணங்களை பெற்றோர்கள் தாங்களாகவே சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அதோடு குழந்தையை பேபி வாஷ் அல்லது சோப் தேய்த்து குளிக்க வைக்கத் தொடங்குகிறார்கள், இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
குழந்தையின் உண்மை நிறம் எப்போது தெரியும்?
3 மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின் உண்மையான நிறம் தெரியும் என்றும், குழந்தை பிறக்கும் போது அழகாகத் தெரிந்தாலும், குழந்தையின் நிறம் உண்மையில் அதன் மரபணுவைப் பொறுத்தது என்றும் டாக்டர் கௌரவ் கூறுகிறார்.
குழந்தையின் நிறம் எப்போது மாறும் என்ற கேள்வி பலருக்கு உள்ளது. இது குறித்து மருத்துவர் கூறுகையில், 3 முதல் 6 மாதங்களில் குழந்தையின் மரபணு நிறம் குழந்தைக்கு தெரியும் என்றும் இந்த காலகட்டத்தில் குழந்தையின் நிறத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.
பல பெண்கள் குழந்தை பிறக்கும் முன்பே குங்குமப்பூவை சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள், அது குழந்தையின் நிறத்தை அழகாக மாற்றும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை உட்கொண்டாலும் அல்லது பிறந்த பிறகு பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், குழந்தையின் நிறத்தை எதுவும் மாற்ற முடியாது என்று மருத்துவர் கூறினார்.
குழந்தைகள் வெயிலில் கருப்பாக மாறுமா?
சூரிய ஒளி, நீர், மாசு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சில நாட்களுக்கு குழந்தையின் நிறத்தை பாதிக்கும் ஆனால் குழந்தையின் நிறத்தை மாற்ற முடியாது என்று மருத்துவர் கூறினார். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு லேசான காலை சூரிய ஒளி நன்மை பயக்கும், இது வைட்டமின் டி குறைபாட்டை ஈடுசெய்கிறது மற்றும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Pic Courtesy: FreePik