Yellow Urine: வெயில் மற்றும் காலநிலை மாற்றத்தில் உடலில் பல மாற்றங்கள் தென்படும். வெயில் காலத்தில் உடல் சூடாகும், அதேபோல் மழைக்காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிப்பதில்லை இந்த இரண்டு நிலைகளும் சிறுநீரில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை புரிந்திருக்க வேண்டும்.
சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறும் போது பொதுவாக மக்கள் அதை சாதாரணமாக கருதுகின்றனர் மற்றும் புறக்கணிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு தெரியுமா, சிறுநீரின் நிறத்தில் மாற்றம் உடலில் வளரும் சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பது இயல்பா?
உடலில் தண்ணீர் இல்லாததால் சிறுநீரின் நிறம் மாறுகிறது. இது தவிர, அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, அதிகப்படியான மது அருந்துதல் போன்றவற்றாலும் சிறுநீர் நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.
பொதுவாக உடலில் நீர்ச்சத்து குறைவால் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறிவிடும். கோடை காலத்தில் இந்த நிலை மிகவும் பொதுவானது. ஆனால் தொடர்ந்து பல நாட்களுக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால் உடனடியாக மருத்துவர் உதவியை நாடுவது நல்லது.
சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணம் என்ன?
நீரழிவு: அதிக வியர்வை காரணமாக, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம். இதன் காரணமாக சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
ஆரோக்கியமற்ற உணவு: அதிகப்படியான ஆல்கஹால், காபி, டீ உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதும் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
நோய்: சில நேரங்களில் இந்த நிலை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் போன்ற சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதேபோல் மஞ்சள் காமாலை அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
சிறுநீர் மஞ்சள் நிறத்தை தடுக்க என்ன செய்வது?
குடிநீர்: உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சிறுநீரின் நிறமும் சாதாரணமாக இருக்கும்.
ஆல்கஹால் மற்றும் காபி உட்கொள்ளலைக் குறைக்கவும்: அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் காபியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மருத்துவரை அணுகவும்: நீண்ட நாட்களாக காரணமின்றி சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
உணவை மேம்படுத்துங்கள்: ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உண்ணுங்கள் மற்றும் உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடலின் எந்த மாற்றத்தையும் சாதாரணமாக புறக்கணிக்கக் கூடாது. உடலில் ஏதும் பாதிப்புகள் வருவதற்கு முன் உடல் சில சமிக்ஞைகளை எழுப்பும் அதை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
Image Source: FreePik