High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

பிறக்கும் போது அதிக உடல் எடை

கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் எடை அதிகரிக்கும் போது, அது குழந்தைகளுக்கான எடையையும் அதிகரிக்கிறது. மேலும், மரபணு சார்ந்த பிரச்சனைகளும் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும். இது போன்ற ஏராளமான காரணங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கிறது. பொதுவாக குழந்தைக்கு சராசரியாக இவ்வளவு எடை தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உல்ளது. ஆனால் இது ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விகிதத்தில் மாறுபடும். இதில் பெண் குழந்தைக்கான சராசரி உடல் எடை 3.2 கிலோ எடையாகவும், ஆண் குழந்தையின் சராசரி உடல் எடை 3.3 கிலோ எடையாகவும் இருக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!

அதிக உடல் எடையுடன் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்

பொதுவாக, அதீத உடல் எடையுடன் குழந்தைகள் பிறப்பது மாக்ரோசோமியா என அழைக்கப்படுகிறது. அதாவது பெரிய குழந்தை என்று அர்த்தம். இவ்வாறாக அதிக உடல் எடையுடன் குழந்தைகள் பிறப்பதற்கான சில காரணங்களைக் காண்போம்.

  • பிறந்த குழந்தை அதிக உடல் எடையுடன் இருப்பதற்குக் காரணம் கர்ப்பிணி பெண்களின் உடல் பருமனே ஆகும். இதன் காரணமாகவே தாய்மார்கள் மாக்ரோசோமிக் குழந்தைகளைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
  • கர்ப்ப காலத்தில் பெண்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் பிறக்கின்றனர். கர்ப்ப காலத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை ஜெஸ்டேஷனல் டயபெட்டிஸ் எனப்படுகிறது.
  • கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், பெண்களில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் குளூக்கோஸானது தொப்புள் கொடி வழியாக குழந்தையை அடைகின்றனர். இதனால், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் காணப்படுவர்.
  • மேலும், இந்த நேரத்தில் அதிக அளவிலான கொழுப்பு குழந்தையைச் சென்றடைவதால் அதீத வளர்ச்சி உண்டாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

Image Source: Freepik

Read Next

How To Stop Breastfeeding: 2 வயது குழந்தைக்கு தாய்ப்பாலை எப்படி நிறுத்துவது?

Disclaimer

குறிச்சொற்கள்