Child Excessive Blinking Causes And Symptoms: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு பழக்கத்தையும் கண்காணிப்பது அவசியமாகும். குழந்தைகளால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தாங்களாகவே சரி செய்ய முடியாது. எனவே பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கான பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறிய மாற்றங்களையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
இதில் குழந்தைகள் அதிகமாக கண் சிமிட்டுவதும் அடங்கும். ஏனெனில் அதிகமாக கண் சிமிட்டுவது சில பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே, குழந்தைகள் அடிக்கடி கண் சிமிட்டினால் அதை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது அதிகப்படியான கண் சிமிட்டுதல் பிரச்சனை என அழைக்கப்படுகிறது.
வயது அதிகரிக்கும் போது, கண் சிமிட்டும் விகிதமும் அதிகமாகும். இளமைப் பருவத்தில் கண் சிமிட்டும் விகிதம் நிமிடத்திற்கு குறைந்தது 14 முதல் 17 முறை அடங்கும். இந்த விகிதம் சுமார் 15 முதல் 30 மடங்கு வரை அதிகரிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் அதிகப்படியான கண் சிமிட்டுதல் பிரச்சனை குறித்து கொல்பியா ஆசியா மருத்துவமனையின் கண் மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனந்த் வீர் ஜெயின் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Care Tips: குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளை பாதுகாக்க இதை செய்யுங்கள்!
குழந்தைகள் அதிகம் கண் சிமிட்டுவதற்கான காரணங்கள்
டாக்டர் அனந்த் ஜெயின் அவர்களின் கருத்துப்படி, அதிகப்படியான கண் சிமிட்டுதல் என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சிச்சையான அனிச்சையாகும். இவ்வாறு செய்வது கண்களை சுத்தப்படுத்துவதுடன் உயவூடுகிறது. மேலும் வெளிச்சம் மற்றும் தூசியின் வெளிப்பாட்டினால், குழந்தை இயல்பை விட அடிக்கடி கண் சிமிட்டலாம். சில நேரங்களில் சில புதிய பழக்கம் அல்லது கண் கஷ்டம் காரணமாகவும் அதிகமாக சிமிட்டுகிறார்கள்.
குழந்தை அதிகம் கண் சிமிட்டுவது, அவர்களது அன்றாட செயல்பாடுகளை பாதிக்கலாம். எனவே அதிகமாக கண் சிமிட்டுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், கண் சிமிட்டும் போது குழந்தைகள் வலி அல்லது வேறு சில அசௌகரியத்தை உணர்ந்தால் கண் பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அடிக்கடி கண் சிமிட்டப்படுவது ஏன்?
நடுக்கங்கள்
குழந்தைகளில் சில எளிய பழக்கங்களான கை குலுக்கல், முகம் சுளித்தல் மற்றும் மீண்டும் மீண்டும் கண் சிமிட்டுதல் போன்றவற்றால் அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அசாதாரண கண் அசைவுகளின் வடிவத்தில் குழந்தைகளில் அடிக்கடி ஏற்படலாம். நடுக்கங்கள் மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை காரணமாக ஏற்படலாம்.
உலர் கண்கள்
குழந்தை கண்களின் எரிச்சல் இருப்பது அல்லது கண்களை அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றால் அதிகமாக கண்சிமிட்டுதல் ஏற்படலாம். இதற்கு கண்கள் வறட்சியாவதும் காரணமாகும். நரம்பியல் பிரச்சனைகள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடு உட்பட பல்வேறு காரணங்களால் உலர் கண்கள் ஏற்படலாம்.
கார்னியா பிரச்சனை
கண்ணின் கருவிழியில் அரிப்பு ஏற்படுவது அல்லது கண் இமைகள் விழுதல் போன்ற உணர்வுகள் கண் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும் குழந்தைகளில் அதிகப்படியான சிமிட்டலை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: Nuts For Babies: 6 மாத குழந்தைக்கு நட்ஸ் கொடுக்கணுமா? அப்ப இப்படி கொடுங்க.
ஒவ்வாமை
ஒவ்வாமை பிரச்சனை காரணமாக குழந்தை தும்மல் மற்றும் மூக்கு ஒழுதல் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். இதனால், குழந்தைகளின் கண்களில் ஒவ்வாமை ஏற்படும். மேலும், இது அதிகமாக கண்களை சிமிட்ட வைக்கும்.
கண்கள் சிரமம்
குழந்தைகள் பெரும்பாலும் கண் அழுத்தத்தால் பாதிக்கப்படுவர். இதன் காரணமாக அதிகமாக சிமிட்டலாம். நீண்ட நேரம் டிவி பார்ப்பது, ஃபோன் திரையைப் பார்ப்பது அல்லது கணினி பயன்படுத்துவது போன்றவை குழந்தைகளின் கண்களில் அழுத்தம் உண்டாவதற்கான காரணங்களாக அமைகிறது. இது அடிக்கடி கண் சிமிட்டுவதை ஏற்படுத்தலாம்.
அப்செஸிவ் கம்பல்சிங் கோளாறு (Obsessive Compulsive Disorder)
இது ஒரு வகையான மன நோய் ஆகும். இதில் வெறித்தனமான எண்ணங்கள் மற்றும் நிர்பந்தங்களால் OCD ஏற்படலாம். இந்நிலையில், குழந்தைகள் தன்னை அமைதிப்படுத்த நிறைய முறை கண் சிமிட்டலாம். பொதுவாக குறுகிய காலத்தில் இந்த வகை கண் சிமிட்டுதல் ஆனது திடீரென்று ஏற்படும்.
பார்வை பிரச்சனை
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற பொதுவான பிரச்சனைகளின் காரணமாகவும், குழந்தைகள் அடிக்கடி கண் சிமிட்டுவர் அல்லது தங்கள் பார்வையை சரி செய்ய மீண்டும் மீண்டும் கண்களைத் தேய்த்துக் கொள்வர்.
குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், குழந்தையை கட்டாயம் மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Tooth Decay: உங்க குழந்தைக்கு பற்சொத்தை வராமல் தடுக்க இதெல்லாம் செய்யுங்க.
Image Source: Freepik