உங்க குழந்தை அதிகமா மொபைல் யூஸ் பண்றாங்களா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

  • SHARE
  • FOLLOW
உங்க குழந்தை அதிகமா மொபைல் யூஸ் பண்றாங்களா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.


Health Effects Of Mobile Phones On Children's Health: நவீன காலகட்டத்தில் இன்று பலரின் வாழ்க்கையில் மொபைல் போன்கள் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. படிப்படியாக, தற்போது குழந்தைகளையும் பாதிப்பதாக அமைகிறது. பள்ளிக்குச் செல்லும் முன்பே, குழந்தைகள் போன் மற்றும் மடிக்கணினி பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

குறிப்பாக நிறைய குழந்தைகள் சமூக வலைதளங்கள், கேம் விளையாடுதல் போன்றவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். குழந்தைகளின் இந்த நிலைமைக்கு பெற்றோர்களே காரணம் எனினும், அதன் இழப்பு குழந்தைகளுக்குத் தான். சிறு வயதில் குழந்தைகளிடத்தில் விலையாட்டுக்காக மொபைல் போன் கொடுப்பது நாளடைவில் அவர்களைப் பாதிப்பதாக அமைகிறது. இதில், குழந்தைகள் அதிகமாக மொபைல் பார்ப்பதால் என்னென்ன வகையில் பாதிப்படைகின்றனர் என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

மொபைல் போன்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்

குழந்தைகளுக்கு ஒரு வகையில் மொபைல் போன்கள் மகிழ்ச்சியைத் தருவதாக இருப்பினும், அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இதில் குழந்தைகள் அதிகளவில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால், ஏற்படும் சில எதிர்மறை விளைவுகளைக் காணலாம்.

நரம்பியல் கோளாறு

மொபைல் போன்கள் குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆய்வு ஒன்றில் மொபைல் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த கோளாறு, குழந்தையின் நடக்க, சுவாசிக்க, மற்றும் புதிய பணிகளைக் கற்றுக் கொள்ள போன்றவற்றைப் பாதிக்கலாம்.

மன வளர்ச்சியில் தடை

மொபைல் பயன்பாட்டால் குழந்தைகளின் மன வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதில் மொபைலில் அதிக பயன்பாட்டைக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் மற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், இது உடன் இருப்பவர்களுடன் கலந்துரையாடலைத் தடுக்கிறது. இதனால், குழந்தைகளின் மன வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படுகிறது

மனச்சோர்வு பிரச்சனை

அதிக மொபைல் உபயோகிப்பு குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது குழந்தைகளை கோபப்பட வைக்கிறது. இதனால் குழந்தைகள் மன நிம்மதி பெறாமல் எப்போதும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். இது தவிர, அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.

கட்டிகள் உருவாக்கம்

குழந்தைகள் அதிகம் மொபைல் பார்ப்பது, அவர்களுக்குக் கட்டி போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆய்வு ஒன்றில் செல்போனில் இருந்து, வெளியேறும் கதிர்வீச்சுக்கள் குழந்தைகளுக்குக் கட்டிகளை உண்டாக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் மூளைக் கட்டிகளுக்கும் மொபைல் போன்களே காரணமாக இருக்கலாம்.

பழக்க வழக்கங்களில் மாற்றம்

குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றத்திற்கு அதிக மொபைல் பயன்பாடு காரணமாகும். மொபைல் இருப்பதால், குழந்தை எந்த வேலையும் செய்வதில்லை. அவர்களிடமிருந்து மொபைலை எடுத்துக் கொண்டால், அவர்கள் அழுவது, கோபப்படுவது உள்ளிட்ட சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுவர்.

குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி?

  • சிறு குழந்தைகள் அழும் போது அல்லது சாப்பிட வைக்கும் போது, மொபைல் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • குழந்தையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்தல். ஏனெனில் பல சமயங்களில் குழந்தைகள் தனியாக இருக்கும் போது மொபைல் பார்க்க ஆரம்பிக்கிறது.
  • குழந்தையை வெளிப்புறத்தில் விளையாட அறிவுறுத்துதல். வீட்டில் விளையாடச் சொல்வது பெரும்பாலும் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர்.
  • ஓவியம், நடனம் அல்லது வேறு எந்தச் செயலிலும் குழந்தையை ஈடுபட வைப்பது.

இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகள் அடிக்கடி மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Calcium Deficiency: குழந்தைக்கு கால்சியம் சத்து குறைவா இருக்க இது தான் காரணமாம்

Image Source: Freepik

Read Next

Summer care Tips for kids: கோடை வெயிலிருந்து குழந்தைகளை காக்க இந்த குறிப்புகள பின்பற்றுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்