Cardamom Benefits For Babies: குழந்தைகள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். ஆனால், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிய பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் ஏலக்காயை சாப்பிட கொடுக்க வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல விளைவைத் தருகிறது. இதில் குழந்தைகளுக்கு ஏலக்காய் தருவதன் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Fruits For Babies: 6 மாத குழந்தைக்கு இந்த பழங்களை கொடுக்கவும்…
குழந்தைகளுக்கு உணவு கொடுத்த பின் ஏலக்காய் தருவதன் நன்மைகள்
செரிமான ஆரோக்கியத்திற்கு
டயட் என் க்யூர் என்ற உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தியின் கூற்றுப்படி, " ஏலக்காய் செரிமானத்திற்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஒரு வகையான அத்தியாவசிய எண்ணெய் மெந்தோன் என்று அழைக்கப்படுகிறது. இது அமிலத்தன்மை போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இதன் மூலம் வாயு, செரிமான பிரச்சனையைக் குறைக்கிறது.
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த
குழந்தைகள் பலரும் அடிக்கடி பல் துலக்க தயங்குவர் என்பதில் சந்தேகமே இல்லை. இது குறித்து திவ்யா காந்தி அவர்கள் கூறுகையில், “பல நேரங்களில் குழந்தைகள் சரியாக பல் துலக்காதது, அவர்களின் பற்களில் தொற்று மற்றும் குழந்தைகளுக்கு வாய் துர்நாற்றத்தை வரவைக்கிறது.” குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து வந்தால், அவர்கள் சாப்பிட்ட பிறகு ஏலக்காயை கொடுக்கலாம். இது அவர்களின் வாயிலிருந்து துர்நாற்றத்தை அகற்றி, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட
ஏலக்காய் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறனை கொண்டுள்ளது. மேலும் இது கெட்ட சுவாசத்தால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Benefits: குழந்தைகளுக்கு பூசணிக்காய் கொடுப்பதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகள்!
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய்
டாக்டர் திவ்யா காந்தி அவர்களின் கூற்றுப்படி, “குழந்தைக்கு குறைந்த அளவு உணவளித்தால் உணவுக்குப் பிறகு ஏலக்காயை கொடுப்பது, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நல்ல விளைவைத் தருகிறது. ஏலக்காயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இதில் அந்தோசயினின்கள், ஃபிளவனாய்டுகள், மற்றும் ஃபினால்கள் போன்ற கூறுகளும் நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சளி, வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஏலக்காயைத் தருவது நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் ஏலக்காய் மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Healthy Brain: குழந்தைகளின் மூளை வளர்ச்சி வலுவாக கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுங்க!
Image Source: Freepik