$
How Is Cardamom Beneficial For Your Health: ஏலக்காய் என்பது நம் இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கக் கூடிய ஒரு மசாலாப் பொருளாகும். இது சுவையை அதிகரிக்க பல்வேறு உணவு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பாயாசம் போன்ற இனிப்பு தயாரிப்பு உட்பட காரமாக செய்யக் கூடிய உணவுகள் பல்வேறு ரெசிபி வகைகளில் இந்த ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, ஏலக்காய் சாறுகள், எண்ணெய்கள், மற்றும் விதைகள் போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாகவே பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டும் சிறந்த மசாலாப் பொருளாகும்.
ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஏலக்காய் ஆனது மெக்னீசியம், வைட்டமின் சி, பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மசாலாப் பொருளாகும். இது குறைந்த அளவிலான கலோரிகளையும், அதிகளவு ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியதாகும். இதில் ஏலக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகளைத் தரும் என்பதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Aadi Koozh Recipe: ஆடி மாசம் வந்துருச்சி! ஆடி கூழ் இப்படி செஞ்சி குடிங்க! மிச்சமே இருக்காது
ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
செரிமானத்தை மேம்படுத்த உதவும் உணவுகளில் பிரதானமான உணவாக அமைவது ஏலக்காய் ஆகும். இது செரிமானம் மற்றும் செரிமானம் தொடர்புடைய பிரச்சினைகளை நீக்க உதவுகிறது. மேலும் குமட்டல், வயிறு அசௌகரியம் மற்றும் வாந்தி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக ஏலக்காய் உட்கொள்வது வலிமிகுந்த புண்களை ஆற்ற உதவுகிறது. ஏலக்காய் சாறு இரைப்பை புண்களின் அளவை குறைந்தது 50 சதவிகிதம் தடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இது பெரும்பாலான வயிற்றுப் புண் பிரச்சினைகளின் வளர்ச்சியுடன் தொடர்புடைய பாக்டீரியா ஆன ஹெலிகோபாக்டர் பைலோரிக்கு எதிராகப் பாதுகாக்கும் என சோதனையில் குறிப்பிடப்படுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க
ஏலக்காய் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆய்வு ஒன்றில், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காய் பவுடர் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இரத்த அழுத்தம் சாதாரண வரம்பிற்கு கணிசமாகக் குறைந்தது. ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், டையூரிடிக் விளைவையும் வழங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோயை எதிர்த்துப் போராட
ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சேர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது. விலங்கு ஆய்வுகளின் படி, ஏலக்காய் பவுடரானது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் சில நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் இது கட்டிகளைத் தாக்கக் கூடிய செல்களின் வலிமையையும் அதிகரிக்கச் செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Garlic Benefits: மழைக்காலத்தில் பூண்டு சாப்பிடுவதில் இவ்வளோ அடங்கி இருக்கா.?
வீக்கத்தைக் குறைக்க
வீக்கம் ஏற்படுவது பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு மூல காரணமாக விளங்குகிறது. இதனைத் தவிர்க்க ஏலக்காய் பெரிதும் உதவுகிறது. இந்த வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் சேர்மங்களை ஏலக்காய் கொண்டுள்ளது. மேலும், செல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்க ஏலக்காய் உதவுகிறது. ஆய்வுகளின் படி, ஏலக்காய் சாறு அருந்துவது குறைந்தது நான்கு வெவ்வேறு அழற்சி சேர்மங்களை தடுப்பதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்துமாவைக் குறைக்க
நுரையீரலுக்கு சுவாசம் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏலக்காய் முக்கியமானதாகும். இது அரோமாதெரபி மற்றும் மாற்று மருந்துகள் போன்ற நுட்பங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உடற்பயிற்சியின் போது ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் உடலின் திறனை மேம்படுத்தும் ஒரு ஊக்கமளிக்கும் வாசனையைக் கொண்டுள்ளது. இது ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவியாக இருக்கும். இவை தொண்டைக் காற்றை தளர்த்தவும், வீக்கமடைந்த காற்றுப்பாதைகளை அடக்கவும் உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு வழிகளில் ஏலக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் உணவுக்கு சுவையைத் தவிர, ஏலக்காயை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் ஏலக்காய் உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Olive Oil Benefits: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்
Image Source: Freepik