Is it good to eat black cardamom in summer: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள் உட்பட சில மசாலாப் பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு மசாலாப் பொருட்களைப் பொறுத்தவரை, கருப்பு ஏலக்காயின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேநீர் தயாரிக்க, பிரியாணி செய்ய மற்றும் இன்னும் சில உணவுகளில் ஏலக்காய் சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியதாகும். எனவே தான் பெரும்பாலான உணவுகளில் இந்த மசாலாப் பொருள் இடம்பிடித்துள்ளது.
இதில் உணவின் சுவையை அதிகரிக்க பெரிய ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது கருப்பு ஏலக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இவை அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பல பண்புகளைக் கொண்டதாகும். இதன் நுகர்வு உடலுக்குப் பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இது செரிமான அமைப்புக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதன் இயல்பு சூடாக இருக்கும். இந்நிலையில் கோடைக்காலத்தில் இதை உட்கொள்வது பாதுகாப்பானதா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
கோடைக்காலத்தில் ஏலக்காயை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா? இது குறித்து சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேதச்சார்யா ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Cardamom: இரவு தூங்கும் முன் ஏலக்காய் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா? நன்மைகள் இங்கே!
கோடையில் கருப்பு ஏலக்காய் உட்கொள்வது நல்லதா?
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைக்காலத்தில் கருப்பு ஏலக்காயை சாப்பிடலாம். ஆனால், இதை மிகக் குறைந்த அளவிலோ அல்லது எப்போதாவது மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மிகவும் வெப்பமான விளைவைக் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் கருப்பு ஏலக்காயைத் தினமும் உட்கொள்வதால், அது உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
இது போன்ற சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக, பித்த இயல்பு உள்ளவர்களுக்கு கோடைகாலத்தில் கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, கோடைக்காலத்தில் கருப்பு ஏலக்காயைத் தவிர்க்க வேண்டும்.
கோடையில் கருப்பு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் வெப்பத்தை சமன் செய்ய
கோடைக்காலத்தில் வாத மற்றும் கபஜ தன்மை கொண்டவர்கள் கருப்பு ஏலக்காயை சாப்பிடலாம். இதற்கு இதன் இயல்பு சூடாக இருப்பதே காரணமாகும். ஆனால், இதை சிறிய அளவில் உட்கொள்வதால் வாத மற்றும் கபஜ தன்மை கொண்டவர்களின் உடல் வெப்பத்தை சமப்படுத்தலாம்.
சுவாச அமைப்புக்கு நன்மை தர
கோடைக்காலத்தில் தூசியின் காரணமாக சளி, இருமல் அல்லது வேறு சில வகையான ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர். இந்நிலையை கருப்பு ஏலக்காய் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் இன்னும் பல்வேறு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை நோய்த்தொற்றுக்களைக் குறைக்க உதவுகிறது.
உடல் நச்சு நீக்கம் பெற
கருப்பு ஏலக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலை நச்சு நீக்கம் செய்ய முடியும். இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைத்து உடலை குணமாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு உணவுக்கு பின் ஒரே ஒரு ஏலக்காய் மென்று சாப்பிடுங்க.. பலனை நீங்களே உணர்வீர்கள்.!
செரிமான ஆரோக்கியத்திற்கு
கோடையில் பலரும் செரிமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில், கருப்பு ஏலக்காய் நன்மை பயக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரிய ஏலக்காய் மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
குறிப்பு
கருப்பு ஏலக்காய் உடலுக்கு நன்மை தருவதாக இருப்பினும், இதை சிலர் தவிர்ப்பது நல்லது.
- அதிக வெப்பத் தன்மையைக் கொண்டவர்கள் கருப்பு ஏலக்காயை உட்கொள்வது உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். இதை உட்கொள்வதால் அமிலத்தன்மை, வாய் புண்கள் அல்லது அதிக வியர்வை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
- பித்த இயல்பு கொண்டிருந்தால், கோடையில் பச்சை ஏலக்காயை உட்கொள்ளலாம். இதன் விளைவாக, குளிர்ச்சியாக இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது.
- கோடைக்காலத்தில் எப்போதாவது இதைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், ஒரு நேரத்தில் ஒரு கருப்பு ஏலக்காயை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
- பித்த இயல்பு கொண்டவர்கள், அதிக வெப்பம் அல்லது வியர்வையை உணருபவர்கள் கருப்பு ஏலக்காயைத் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை
கோடைகாலத்தில் பெரிய ஏலக்காயை உட்கொள்வது நன்மை பயக்கும். ஆனால், இதை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். மறுபுறம், இதன் வெப்பத்தன்மை காரணமாக, பித்த இயல்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைக்கு மருந்து எடுத்துக் கொண்டால், ஒரு நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதை எடுத்துக் கொள்வது சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: Cardamom Health Benefits: தினமும் ஏலக்காய் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik