Thu Oct 29, 2026 | 01:44 PM IST

காபியுடன் இந்த உணவுகளைச் சேர்த்து மறந்தும் சாப்பிட்ராதீங்க!

காபியுடன் இந்த உணவுகளைச் சேர்த்து மறந்தும் சாப்பிட்ராதீங்க!காபியுடன் இந்த உணவுகளைச் சேர்த்து மறந்தும் சாப்பிட்ராதீங்க!

What Food Combinations Are Bad With Coffee: ஒவ்வொரு வீட்டிலும் காலை எழுந்த உடனேயே டீ, காபி உட்கொள்வதையே அதிகம் விரும்புவர். இதில் பெரும்பாலானோர் டீ, காபி உடன் மற்ற சில உணவுப் பொருள்களைச் சேர்த்து உண்ணுவர். அதன் படி, இதில் அதிகம் உட்கொள்ளப்படக்கூடிய பானங்களில் ஒன்றாக காபி அமைகிறது. இதை பலரும் சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காக வெவ்வேறு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர்.

எனினும், நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சில உணவுகளை காபியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவை இரைப்பை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் அல்லது உடலில் சில ஊட்டச்சத்துக்களை குறைவாக உறிஞ்சுவது உடல் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். இதில் காபியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cauliflower Bajji Recipe: உங்க குழந்தைக்கு காலிஃபிளவர் பஜ்ஜி இப்படி செஞ்சி கொடுங்க!

காலை நேரத்தில் காபி

பல வீடுகளில் காலை உணவாக காபி முக்கிய இடம் பெறுகிறது. எனவே காபியை அருந்துவது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், இது பல்வேறு அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுப்பதுடன், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைக்கிறது. எனினும், இந்த ருசியான பானம், பல ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலைப் பாதிக்கிறது. இதில் காபி குடிக்கும் போது அதனுடன் சாப்பிடக் கூடாத உணவுகளைக் காணலாம்.

காபியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்

பால்

பாலைத் தனியாக அருந்துவது ஊட்டச்சத்து உட்கொள்ளலை மேம்படுத்துகிறது. பால் மற்றும் பிற பால் பொருள்களுடன் எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களைத் தருகிறது. இவை தசை செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம், இரத்தம் உறைதல் மற்றும் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு உதவுகிறது. இதை காபியுடன் இணைத்து உட்கொள்வது ஊட்டச்சத்துக்களை 20% அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உடலில் உறிஞ்சப்படாத கால்சியம் சத்துக்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படலாம். இதனால் சிறுநீரகக் கற்கள் மற்றும் பிற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

காலை உணவு தானியங்கள்

சிலர் பாலுடன் காலை உணவு தானியங்களை இணைத்து உட்கொள்வர். மேலும், காபியை விரும்புவோர்களும் இந்த உணவு தானியங்களை சேர்த்து சாப்பிடுவார்கள். எனினும், பல்வேறு தானியங்களானது, துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற தாதுக்களால் செறிவூட்டப்படுகிறது. இந்த உணவுகளை காபியுடன் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கலாம். எனவே காபி உட்கொள்வதற்கும், தானியங்களை உட்கொள்வதற்கும் நேரம் நிறுவப்படவில்லை எனினும், இரண்டையும் உட்கொள்வதைப் பிரிப்பதே சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Foods: மழைக்காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

சிட்ரஸ் பழங்கள்

பலரும் காலை உணவு அல்லது மாலை சிற்றுண்டிக்காக பழங்களை சாப்பிட விரும்புகின்றனர். இந்த நேரம் காபி குடிப்பதற்கான நேரமாகவும் அமைகிறது. இதில் காபி இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டதாக இருப்பின், ஆரஞ்சு அல்லது திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களுடன் காபி உட்கொள்வது செரிமானத்தை சீர்குலைப்பதாகக் கூறப்படுகிறது. சிட்ரஸ் பழங்கள் இயற்கையான அமிலத்தன்மை இருப்பதால், இவற்றை உட்கொள்வது கடுமையான இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயை (GERD) ஏற்படுத்தலாம். இது குமட்டல், வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

சிவப்பிறைச்சி

ஆய்வுகளின் படி, காபியுடன் சிவப்பிறைச்சி உட்கொள்வது விரும்பத்தகாத ஒன்றாகும். ஏனெனில், இந்த பானம் குடலில் உள்ள ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கிறது. மேலும் தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி உட்கொள்வது உடலில் இரும்புச்சத்து அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. எனவே காபியுடன் சிவப்பிறைச்சி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் ஃபுட்

காபியுடன் ஆரோக்கியமற்ற குப்பை உணவுகள் மற்றும் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது டிஸ்லிபிடெமியாவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இரத்த ஓட்டத்தில் கொழுப்பு அளவு அசாதாரணமானதாகும். வறுத்த சிக்கன் அல்லது பனீருடன் காபி உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இதனால், இதய நோய் தொடர்பான ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இந்த வகை உணவுகளைக் காபியுடன் உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Olive Oil Benefits: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்

Image Source: Freepik

Read Next

→ Moringa Leaves: ஆண்களே… தினமும் முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் 6 குதிரையின் பலம் கிடைக்குமாம்!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.