$
How To Make Cauliflower Bajji: குழந்தைகள் பலரும் தீனி சாப்பிடுவதை விரும்புவர். ஆனால், அவர்களுக்கு பழங்கள், நட்ஸ் போன்றவற்றை ஸ்நாக்ஸாகக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக, வெளிசார்ந்த உணவுகளையே அதிகம் விரும்புவர். பேல் பூரி, மசால் பூரி, காலிஃபிளவர் சில்லி, காலிஃப்ளவர் பக்கோடா, பாஸ்தா என பலவகையான மசாலா ரெசிபிகளை அதிகம் விரும்புவர்.
ஆனால், இந்த ரெசிபிகளை நாம் கடைவெளியில் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த ரெசிபிகளை வீட்டிலேயே குழந்தைகளுக்கு எளிதான முறையில் தயார் செய்யலாம். குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் போது இது போன்று வீட்டில் செய்து கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதுடன் உடல் நலப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dindigul Mutton Biryani: பூஜா செய்து அசத்திய திண்டுக்கல் மட்டன் பிரியாணி.! இப்படி செய்யுங்கள்..
காலிஃப்ளவர் பஜ்ஜி
குழந்தைகளுக்கு எளிமையான முறையில் வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய காலிஃப்ளவர் பஜ்ஜி செய்முறை குறித்து காணலாம்.
தேவையானவை
- காலிஃப்ளவர் - 400 கிராம்
- கடலை மாவு - 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- கார்ன் ஃப்ளோர் - ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்முறை
- முதலில் காலிஃப்ளவரை சிறிது சிறிது பூக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, அடுப்பில் நீரை வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு கொதிக்கும் போது காலிஃப்ளவர் பூக்களை நீரில் மூழ்கும் அளவு சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.
- அதன் பிறகு தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி, காலிஃப்ளவரைத் தனியாகப் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின், இந்த காலிஃப்ளவரை மீண்டும் ஒருமுறை நன்கு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
- அதன் பின் ஒரு அகலமான பாத்திரம் ஒன்றில் காலிஃப்ளவரைச் சேர்த்து, அதில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளோர் மற்றும் தேவையான அளவு உப்பு போன்ற அனைத்துப் பொருள்களையும் கலந்து கொள்ள வேண்டும்.
- பின்னர் இதில் கால் கப் தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக தெளித்து கெட்டியான பதத்திற்கு கலந்துகொள்ளவேண்டும். பிறகு இதை அப்படியே 15 நிமிடங்கள் மூடி வைக்கலாம்.
- பிறகு அடுப்பில் வாணலி ஒன்றில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் காலிஃபிளவரைச் சேர்க்கலாம்.
- இது லேசாக வெந்த பிறகு நன்கு திருப்பி மற்றொரு புறமும் மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.
- இவ்வாறு காலிஃப்ளவர் பஜ்ஜி தயாரிக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ப்ரோக்கோலி vs காலிஃபிளவர் - எது ஆரோக்கியமானது?
காலிஃப்ளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த உணவுகளில் இதுவும் ஒன்று. ஒரு கப் அளவிலான காலிஃப்ளவரில் 5 கிராம் மட்டும் கார்போஹைட்ரேட்டுகளும், 30 கலோரிகள் மட்டுமே உள்ளது.
- காலிஃப்ளவரில் வயோதிகத்தை குறைக்கும் உட்பொருட்கள் நிறைந்துள்ளது. மேலும், காலிஃப்ளவரானது புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான தன்மைகளையும் கொண்டுள்ளது.
- ஆரோக்கியமான உடல் எடை மேம்பாட்டிற்கு காலிஃப்ளவர் மிகுந்த நன்மை பயக்கும்.
- இது குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளையும், அதிகளவு நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
- இது உடல் இயற்கை முறையில் கழிவு நீக்கம் செய்ய உதவுகிறது.
- மேலும் காலிஃப்ளவரின் உதவியுடன் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

காலிஃப்ளவர் சாப்பிடுவதன் விளைவுகள்
ஒவ்வொரு உணவும் பல்வேறு நல்ல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பினும், சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றன..
- இது வாயுவை உற்பத்தி செய்யக் கூடியது என்பதால், செரிமான கோளாறு உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
- இல்லையெனில், இவை வலி, உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வாயுத்தொல்லை போன்ற பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.
- இவ்வாறு வீட்டிலேயே எளிமையான முறையில் காலிஃபிளவர் பஜ்ஜி செய்து கொடுப்பது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
இந்த பதிவும் உதவலாம்: CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!
Image Source: Freepik