How To Prepare Pain Relief Kashayam At Home: மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் இன்று பலரும் பல்வேறு உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். அதிலும் வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான உடல் நலப் பிரச்சனைகளை இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட ஏற்பட நம்மைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு மருத்துவர்களை நாடி, நாம் சில மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் இந்த மருந்துகள் கேட்காமல் போகலாம். எனவே பெரிய விளைவுகளைத் தவிர்க்க பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே வீட்டிலேயே சில முயற்சிகளைக் கையாள வேண்டும். இதன் மூலம் பிரச்சனை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க
இளம் வயதிலேயே ஏற்படும் வலி
தற்காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக வயதாகும் போது சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் அனைத்தையும் இளம் வயதிலேயே அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. அதிலும் 30 அல்லது 40-ஐ கடந்தாலே, சில உடல் உபாதைகள் ஏற்படுவது தொடர் கதையாகி விடுகிறது. இதில் முக்கியமாக இருப்பது உடல் பாகங்களில் ஆங்காங்கே ஏற்படும் வலிகள் ஆகும். இந்த வலிகளைப் போக்குவதற்கு வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளவோ அல்லது வெளிப்புறத்தில் தடவவோ வேண்டும். இவ்வாறே ஒவ்வொரு நாளையும் கழிக்கும் நிலை நேரிடும். எனவே இதைத் தடுக்க சிறு சிறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உதவும்.
அவற்றைத் தெரிந்து கொண்டு பின்பற்றுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். அது வேறு ஒன்றும் இல்லை. பலவித பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக அமைவது கஷாயம் ஆகும். இந்த கஷாயத்தை வீட்டின் சமையலறையில் உள்ள சில எளிய பொருள்களைப் பயன்படுத்தியே நாம் தயார் செய்ய முடியும். இவற்றைப் பயன்படுத்தி, உடலுக்குத் தேவையானவற்றை செய்து கொள்ள முடியும். இந்த ஒரு கஷாயத்தைப் பயன்படுத்தி உடலில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி, தைராய்டு, நீரிழிவு நோய், பாத எரிச்சல், உடல் சோர்வு, வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு, கல்லீரல் வீக்கம், கை கால் வலி போன்ற பல்வேறு வியாதிகளிலிருந்து நாம் வாழ்நாள் முழுவதும் விடுபடலாம்.
வலி நிவாரணிக்கு கஷாயம் தயார் செய்யும் முறை
வீட்டிலேயே உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தி பல்வேறு வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தேவையானவை
- கொத்தமல்லி விதைகள் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- பட்டை, கிராம்பு - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
இந்த பதிவும் உதவலாம்: Black Raisins For Cough: தொடர் இருமலால் அவதியா? கருப்பு உலர் திராட்சையை இப்படி சாப்பிடுங்க
கஷாயம் செய்யும் முறை
- முதலில் கஷாயம் செய்யத் தேவையான பொருள்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
- இதை இரவு முழுவதும் மூடி வைத்து விட வேண்டும்.
- பின் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும்.
- இவ்வாறு ஐந்து நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் இந்தக் கஷாயத்தைக் குடிக்கலாம்.
- இதை அவ்வப்போது வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மேலே கூறப்பட்ட 10 பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
இந்த எளிமையான வீட்டு வைத்திய முறையைப் பயன்படுத்தி, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
குறிப்பு
இதில் கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும், முற்றிலும் உண்மை என்றும் கூற முடியாது. எனினும் தீவிர அல்லது நாள்பட்ட பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவரை அணுகுவது தான் சிறந்த வழியாகும். எனவே தேவையான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி பலன் பெறுவதே சிறந்தது.
மேலும் கஷாயம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் பொருள்களில் ஒவ்வாமை பிரச்சனை கொண்டிருப்பவர்களும் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு கஷாயத்தைக் குடிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!
Image Source: Freepik