$
How To Make Joint Pain Oil At Home: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் போதுமான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலரும் முழங்கால் வலியால் அவதியுறுகின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, வட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு, எலும்பு பலவீனம் போன்ற காரணங்களால் முழங்கால் வலி ஏற்படும். சிலருக்கு இந்த வலி சில நேரம் மட்டும் நீடிக்கலாம். சிலருக்கு பல வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் வரை நீடிக்கும்.
முழங்கால் வலி நீங்க பல வகையான எண்ணெய்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் நன்மைகள் குறைவாகவோ அல்லது பக்க விளைவுகள் இருப்பதாகவோ இருக்கலாம். இந்த பொருள்களில் உள்ள இரசாயனங்கள் தோலில் அரிப்பு அல்லது வெடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க, வீட்டிலேயே எளிமையான முறையில் மூட்டு வலியைக் குணப்படுத்த உதவும் எண்ணெயைத் தயார் செய்யலாம். அந்த வகையில் மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தயார் செய்யப்படும் எண்ணெய் குறித்தும், அதன் நன்மைகளையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Clove Tea Benefits: சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா இருக்கா? அப்போ இந்த மூலிகை டீயை ட்ரை பண்ணுங்க!
மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களான மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெய் முழங்கால் வலி குணமாக உதவுகிறது.
ஆலிவ் எண்ணெயில் ஒமேகா 3, 6 மற்றும் 9 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் உடலில் மூட்டுகள் மற்றும் முழங்கால்களுக்கு நன்மை தருகிறது. இந்த எண்ணெய் முழங்கால் வீக்கம் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. ஆலிவ் எண்ணெயுடன் மஞ்சளைப் பயன்படுத்துவது கூடுதல் நன்மையைத் தருவதாக அமைகிறது.
மஞ்சள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை மருத்துவத்திற்கு உதவும் பொருளாகும். இதில் குர்குமின் நிறைந்துள்ளது. மேலும், இதில் அழற்சி எத்ர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

முழங்கால் வலிக்கு ஆலிவ் மற்றும் மஞ்சள் எண்ணெய் தயாரிக்கும் முறை
முழங்கால் வலிக்கு மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்த பயனைத் தரும்.
- ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் -1 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் ஆலிவ் எண்ணெயை பாத்திரம் ஒன்றில் சூடாக்க வேண்டும்.
- இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சூடு செய்யவும்.
- எண்ணெயில் மஞ்சள் சாறு கலந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.
- கலவை மந்தமாக மாறும் வரை காத்திருக்க வேண்டும்.
- பின், வடிகட்டி இல்லாமல் கொள்கலனில் நிரப்பி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Tea Recipes: தொண்டை வலியைக் குறைக்க இந்த டீ எல்லாம் குடிங்க.
எப்படி பயன்படுத்துவது
- இந்த கலவையை முழங்கால்களில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
- இதில் 15 நிமிடம் மசாஜ் செய்த பிறகு, கலவையைத் தடவி விட்டு விடலாம்.
- இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே தயார் செய்யப்படும் வலி நிவாரணி எண்ணெய்
மஞ்சள் மற்றும் ஆலிவ் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் மூட்டு வலிக்கு உதவுகிறது. இது தவிர, ஆலிவ் எண்ணெயைத் தவிர, வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய பல வகையான எண்ணெய்கள் உள்ளன. இவை அனைத்திலும் வலி நிவாரணி குணங்கள் காணப்படுகிறது. பூண்டு எண்ணெய், இஞ்சி எண்ணெய், எள் எண்ணெய், கறிவேப்பிலையில் செய்யப்பட்ட எண்ணெய் போன்றவை வலி நிவாரணிக்கு உதவுகிறது.
முழங்கால் வலியை நீக்கும் மசாலாக்கள்
மஞ்சளுடன் மற்ற சில மசாலாப் பொருள்களைக் கொண்டும் முழங்கால் வலியை நீக்க முடியும். அந்த வகையில் கிராம்பு, இலவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம், கருமிளகு போன்றவை முழங்கால் வலிக்கு உதவுகிறது. இந்த கலவையை பேஸ்ட் போல தடவலாம் அல்லது மசாலாப் பொருள்களை பாலுடன் கலந்து சாப்பிடலாம். எனினும் இவற்றை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Delay Periods Remedies: லேட் பீரியட்ஸ் பிரச்சனையா? இதெல்லாம் டிரை பண்ணுங்க.
Image Source: Freepik