Homemade Baby Cream: குழந்தைக்கு ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?

  • SHARE
  • FOLLOW
Homemade Baby Cream: குழந்தைக்கு ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?

குளிர்காலத்தில் குழந்தையின் சருமம் பாதிக்காமல் பாதுகாப்பாக வைக்க, பல வகையான பொருள்கள் சந்தையின் கிடைக்கிறது. எனினும், அதில் இரசாயனங்கள் மற்றும் வேறு சில வகையான செயற்கை வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சருமத்திற்கு வீட்டிலேயே செய்யப்பட்ட இயற்கையான பேபி கிரீம் பயன்படுத்தப்படுகிறது.

குளிர்காலத்தில் குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற இராசயனமற்ற இயற்கையான கிரீமைத் தயார் செய்யலாம். அந்த வகையில், பாதாம் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லிருந்து குழந்தைகளின் சருமத்திற்கு கிரீம் தயார் செய்யும் முறை குறித்து காண்போம்.

வீட்டிலேயே பேபி கிரீம் தயாரிப்பது எப்படி

தேவையான பொருள்கள்

  • பாதாம் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பெட்ரோலியம் ஜெல்லி - 4 தேக்கரண்டி
  • கிளிசரின் - 10 தேக்கரண்டி
  • சோளமாவு

இந்த பதிவும் உதவலாம்: Home Remedies For Blocked Nose:மூக்கடைப்பா?… இந்த எளிய வீட்டு வைத்தியங்கள பாலோப் பண்ணுங்க!

தயாரிப்பது எப்படி

  • முதலில் சிறிய கடாய் ஒன்றில் 2 தேக்கரண்டி தண்ணீர் மற்றும் பாதாம் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும்.
  • பின் பாத்திரத்தில் வெந்நீர் மற்றும் எண்ணெய் ஊற்றி சோள மாவு கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை நன்கு தயார் செய்து பின் கிளிசரின் சேர்க்கலாம்.
  • இறுதியாக இந்த கலவையில் பெடரோலியம் ஜெல் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயார் செய்யலாம்.
  • கிரீம் செய்த பிறகு அது குளிர்ந்து வரும் வரை தனியாக வைத்துக் கொள்ளலாம்.
  • இதை காற்று புகாத கொள்கலனில் சேமித்துக் கொள்ளலாம்.

பால் மற்றும் பாதாம் கொண்ட கிரீம்

இது தவிர, பால் மற்றும் பாதாமில் இருந்து குழந்தைகளுக்கான கிரீம் தயார் செய்யலாம். இவை இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. இதில் பால் மற்றும் பாதாம் பருப்பில் இருந்து கிரீம் ஹயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil On Feet: பாதங்களில் இந்த பிரச்சனையா? தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் பண்ணுங்க

தேவையான பொருள்கள்

பால் - 2 முதல் 3 தேக்கரண்டி

பாதாம் - 7 முதல் 8 துண்டுகள்

கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் பாத்திரம் ஒன்றில் பாலை எடுத்து, அதில் பாதாமை ஊறவைக்க வேண்டும்.
  • இரவு முழுவதும் பச்சைப்பாலில் ஊறவைத்த பாதாமை காலை உரிக்கலாம்.
  • பின் தோல் நீக்கிய பிறகு மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
  • பாதாம் விதை உலர்ந்தால், மீண்டும் பாலைச் சேர்க்கவும்.
  • இந்த கலவையுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கிரீம் போல தயார் செய்ய வேண்டும்.
  • இந்த கிரீம் தயாரான பிறகு காற்று புகாத கொள்கலனில் சேர்க்கலாம். இத கிரீமை குழந்தைகளுக்கு 2 வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Castor Oil For Eyes: கண்பார்வை நல்லா தெரிய மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்கும் விளக்கெண்ணெய் ஒன்னு போதும்

Image Source: Freepik

Read Next

Onion Peel Benefits: உச்சி முதல் பாதம் வரை.. வெங்காயத் தோலின் நன்மைகள் இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்