Expert

Tea Tree Toner: சரும பொலிவை அதிகரிக்கும் டீ ட்ரீ டோனர். இதை வீட்டிலேயே எளிதாக இப்படி தயார் செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Tea Tree Toner: சரும பொலிவை அதிகரிக்கும் டீ ட்ரீ டோனர். இதை வீட்டிலேயே எளிதாக இப்படி தயார் செய்யுங்க

அந்த வகையில் சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன், பல பிரச்சனைகளிலிருந்து தீர்வு தரும் விதமாக டீ ட்ரீ டோனர் உதவுகிறது. இது சந்தையில் மிகவும் விலை உயர்ந்ததாகவும், பல வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம். இதில் டீ ட்ரீ டோனரை ரசாயனம் இல்லாமல் வீட்டிலேயே தயார் செய்யும் முறை குறித்து, நொய்டாவில் உள்ள ஸ்டுடியோ 25 பியூட்டி பார்லரின் அழகுக்கலை நிபுணர் பூஜா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க

வீட்டிலேயே டீ ட்ரீ டோனர் தயாரிக்கும் முறைகள்

டீ ட்ரீ டோனரானது எண்ணெய் பசை அல்லது கலவையாக உள்ள சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டோனரைப் பயன்படுத்துவது சருமத்தில் திறந்திருக்கும் துளைகளை குறைத்து முகத்தை பளபளக்க வைக்கிறது. இதை வீட்டிலேயே இரண்டு வழிகளில் தயார் செய்யலாம்.

  • வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு டீ ட்ரீ டோனர் தயாரிக்க 50 மி.லி. அளவு பன்னீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் அரை கப் கிரீன் டீ, 4 துளிகள் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலக்க வேன்டும். இவை அனைத்தையும் ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் போட்டு கலக்கவும். இவ்வாறு வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத டீ ட்ரீ டோனர் தயார் செய்யப்பட்டது. இது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் உள்ள ஆலோவேரால ஜெல் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
  • மற்றொரு முறையாக, 1 கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் அளவு கிரீன் டீ சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு, கிரீன் டீயை குளிர வைத்து, அதை ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் நிரப்பி, 5 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்க்க வேண்டும். ஸ்ப்ரே பாட்டிலின் மூடியை மூடி நன்றாகக் கலக்க வேண்டும். இவ்வாறு தயாரான டீ ட்ரீ டோனரை முகத்தைக் கழுவிய பிறகு பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil On Feet: பாதங்களில் இந்த பிரச்சனையா? தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் பண்ணுங்க

டீ ட்ரீ டோனர் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

சருமத்தை உலர வைக்காமல், முகப்பருவிலிருந்து பாதுகாக்க டீ ட்ரீ டோனர் ஒரு நல்ல இயற்கையான தீர்வாகும். இது சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டோனரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சரும எரிச்சலைக் குறைக்கவும், சரும தொற்றுக்களைத் தடுக்கவும் உதவுகிறது.

  • இந்த டோனர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதால், இவை முகப்பருவைக் குறைக்க உதவுகிறது.
  • டீ ட்ரீ டோனர் சருமத்தை நன்கு சுத்தப்படுத்துவதுடன், நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
  • குறிப்பாக இந்த டோனர் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது. இதில் எந்த வித இரசாயனமும் பயன்படுத்தப்படாததால், இதன் பக்கவிளைவுகள் குறைவாகும்.

இவ்வாறு, எளிமையான முறையில் வீட்டிலேயே டீ ட்ரீ டோனரைத் தயார் செய்யலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது, சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனினும், இந்த டோனரைப் பயன்படுத்துவதால் எரிச்சல் அல்லது சொறி ஏற்பட்டால் இதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Baby Cream: குழந்தைக்கு ஃபேஸ் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம்?

Image Source: Freepik

Read Next

Inflammation Reducing Tips: உடலில் வீக்கம் குறைய தினமும் நீங்க செய்ய வேண்டியவை

Disclaimer