Cauliflower soup: மாஸ் வேகத்தில் வெயிட் லாஸ் செய்யணுமா? சூப்பரான இந்த சூப் ரெசிபி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Cauliflower soup: மாஸ் வேகத்தில் வெயிட் லாஸ் செய்யணுமா? சூப்பரான இந்த சூப் ரெசிபி செய்யுங்க

இந்த காலிஃபிளவர் உட்கொள்ளல் ஆனது பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கும், வயதானவர்களுக்கும் உடல் வலிமை பெறவும், நோயெதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. காலிஃபிளவரில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது. இத்தகைய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட காலிஃபிளவரைக் கொண்டு புது ரெசிபியான காலிஃபிளவர் சூப் செய்வது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ப்ரோக்கோலி vs காலிஃபிளவர் - எது ஆரோக்கியமானது?

காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி?

தேவையானவை

  • காலிஃபிளவர் – 1
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • பால் – ஒரு கப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • பூண்டு – 5 பல்
  • வெண்ணெய் – தேவையான அளவு
  • கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

காலிஃபிளவர் சூப் செய்முறை

  • முதலில் காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து, பூவை மட்டும் எடுத்து துருவிக்கொள்ள வேண்டும்.
  • பிறகு, காலிஃப்ளவர் தண்டை பொடியாக நறுக்கி கொள்ளலாம். இதனுடன் பூண்டையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதன் பின் காலிஃப்ளவர் தண்டு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனைத் தொடர்ந்து, ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃபிளவரை போட்டு வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Honey Garlic Cauliflower: இனி குழந்தைகளுக்கு இப்படி காலிஃப்ளவர் செய்து கொடுங்க… கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

  • அதன் பிறகு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை சேர்த்துக் கிளற வேண்டும்.
  • இதில் 2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்க வைக்கலாம்.
  • பிறகு வதக்கி வைத்த காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • அவற்றை அப்படியே கீழே இறக்குவதன் மூலம் நாம் சத்தான மற்றும் சுவையான காலிஃப்ளவர் சூப் தயார் செய்யலாம். இதை ஒரு கப்பில் ஊற்றி பிறகு சிறிது மிளகுத்தூள் தூவி பருகலாம்.

காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • காலிஃபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
  • காலிஃபிளவர் புற்றுநோய் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
  • இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது.
  • காலிஃபிளவர் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது.

இவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான முறையில் புதிய ரெசிபிகளைச் செய்து சாப்பிடலாம். இவை சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தையும் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cauliflower Bajji Recipe: உங்க குழந்தைக்கு காலிஃபிளவர் பஜ்ஜி இப்படி செஞ்சி கொடுங்க!

Image Source: Freepik

Read Next

Drinking hot Water: காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்க? இதை தெரிந்து கொள்ளுங்க!

Disclaimer