How to make restaurant style paneer butter masala: புரட்டாசி மாதம் என்றாலே நான்வெஜ் பிரியர்களுக்கு சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்த மாதம் முழுவதும் நான்வெஜ் சாப்பிடுவதை விடுத்து வெஜ் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நான்வெஜ் சுவையில் வீட்டிலேயே அருமையான பனீர் பட்டன் ரெசிபியைத் தயார் செய்யலாம். இதை ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றில் வைத்து சாப்பிடலாம். இதில் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான பனீர் பட்டன் ரெசிபியை வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!
பனீர் பட்டர் மசாலா தயார் செய்யும் முறை
தேவையானவை
- பன்னீர் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லி தூள் - 2 டீஸ்பூன்
- சீரக தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- முந்திரி பருப்புகள் - 10
- வெண்ணெய் - 200 கிராம்
- கிராம்பு - 2 துண்டுகள்
- பட்டை துண்டுகள் - 1
- ஏலக்காய் - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

பனீர் பட்டர் மசாலா தயாரிக்கும் முறை
- முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம்.
- பிறகு அதை கடாய் ஒன்றில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, பின் மிதமான சூட்டில் வதக்கி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர், ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு, நறுக்கிய வெங்காயம், இரண்டு ஏலக்காய் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இதில் வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு இதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கலாம்.
- இதை 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளலாம்.
- அதன் பிறகு அதை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Palm fruit kulfi: அருமையான சுவையில் நுங்கு குல்ஃபி! வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்க
பனீர் பட்டர் மசாலா தயார் செய்வது எப்படி?
- இப்போது பன்னீர் மசாவிற்கு தேவையான மசாலவை தயார் செய்ய வேண்டும்.
- அதற்கு முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- பிறகு இதில் கிராம்பு, லவங்க பட்டை, பிரியாணி இலை போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- அதன் பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கலாம். இதை இறுதியாக அரைத்து வைத்து இருந்த தக்காளி வெங்காய கரைசலை போட்டு வதக்க வேண்டும்.
- பின்னர், இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடலாம்.
- இது கிரேவி பதத்தில் இருக்கும் போது பன்னீர் மற்றும் கஸ்தூரி மேத்தியை சேர்த்து, அதை மிதமான தீயில் 4 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
- இப்போது சுவையான மற்றும் அருமையான பனீர் பட்டர் மசாலா தயாராகி விடும்.

பனீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பனீர் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இதனை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
- சைவ உணவு உண்பவர்களுக்குத் தேவையான புரதங்களை பனீர் உட்கொள்வதன் மூலம் பெறலாம். இதில் சரியான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. பாலாடைக்கட்டிகளுடன் ஒப்பிடுகையில், இது ஒரு ஆரோக்கியமான விருப்பம் ஆகும்.
- தசை உருவாக்கத்திற்கு பனீர் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கு சிறந்ததாக அமைகிறது.
- இதில் இன்சுலின் உற்பத்திக்குத் தேவையான டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கவும், சர்க்கரையை சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறது.
- உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனீர் உதவுகிறது. எனவே இது சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்த்தொற்றுக்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
இது போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற பனீரை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mushroom Green Masala: நாவில் எச்சில் ஊற வைக்கும் காளான் க்ரீன் மசாலா… எப்படி செய்யணும் தெரியுமா?
Image Source: Freepik