Palm fruit kulfi: அருமையான சுவையில் நுங்கு குல்ஃபி! வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Palm fruit kulfi: அருமையான சுவையில் நுங்கு குல்ஃபி! வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்களது உணவு முறையை மிகவும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என எதுவாக இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தங்களது அத்தியாவசிய உணவு வகைகளில் ஆரோக்கியமானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளலாம். இதில் நுங்கை வைத்து எளிமையான முறையில் சுவையான நுங்கு குல்பி தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

நுங்கு குல்பி தயார் செய்யும் முறை

தேவையானவை

  • பால் - அரை லிட்டர்
  • நுங்கு - 8
  • நாட்டுச் சர்க்கரை - கால் கப்
  • சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • நுங்கு - 2 (துண்டுகளாக நறுக்கியது)
  • ஐஸ்க்ரீம் குச்சிகள் - 8

நுங்கு குல்பி தயாரிக்கும் முறை

  • முதலில் 8 நுங்குகளைத் தனியாக தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அரை லிட்டர் பாலை நன்கு காய வைத்து, ஆறவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • இப்போது, பெரிய மிக்ஸி ஜார் ஒன்றில் ஜாரில் நுங்கு, பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, கடாய் ஒன்றில் இந்த அரைத்த கலவையைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • அதன் பின் வேறு பாத்திரம் ஒன்றில் சோள மாவு மற்றும் பால் சேர்த்து, கட்டி வராமல் கலக்கி எடுத்துக் கொள்ளலாம்.
  • இந்த சோள மாவு கரைசலை கொதிக்கும் கலவையில் போட்டு, இடைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  • இவ்வாறு கிளறும் போது, கலவை கலவை சிறிது கெட்டியாக மாறும். இதை கடாயில் இறக்க வேண்டும்.
  • இந்த கலவையின் சூடு ஆறிய பின்னர் சிறிய அளவிலான டம்ளர்களில் ஊற்றி, அதில் ஐஸ்குச்சிகளை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
  • இதை ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைத்து, கட்டியாக மாறிய பிறகு வெளியே எடுக்கலாம்.
  • இதை டம்ளரிலிருந்து வெளியே எடுத்து அனைவரும் சாப்பிடலாம்.
  • இவ்வாறு சூப்பரான, சுவையான நுங்கு குல்பியை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Matcha tea benefits: தினமும் மட்சா டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

நுங்கு சாப்பிடுவதன் நன்மைகள்

நுங்கு ஆனது இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி, கால்சியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு நீர்ச்சத்துக்களும், குறைந்தளவு கலோரிகளும் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை நீரிழிவு நோயாளிகளும் தாரளமாக உட்கொள்ளலாம். எடையைக் குறைக்கவும் நுங்கு உதவுகிறது.

மேலும், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும், உடலின் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெயிலின் தாக்கத்தை குறைக்க நுங்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதை கோடைக்காலத்தில் உட்கொள்ளும் போது, கோடைக்கால அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Biriyani: வித்தியாசமான சுவையில் தேங்காய் காளான் பிரியாணி! செய்முறை இதோ!

Image Source: Freepik

Read Next

Mushroom Biriyani: வித்தியாசமான சுவையில் தேங்காய் காளான் பிரியாணி! செய்முறை இதோ!

Disclaimer

குறிச்சொற்கள்