How to make tomato soup at home recipe: பருவகாலத்திற்கு ஏற்பட உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் குளிர்ந்த காலநிலையில் உடலை சூடாக வைத்திருக்க பலரும் விரும்புவர். எனவே, அதற்கு ஏற்ப உணவுகளை உட்கொள்வது நல்லது. அதன் படி, உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவும் உணவுகளில் தக்காளியும் ஒன்றாகும். குளிர்கால உணவான தக்காளியை பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். அதில் ஒன்றாக தக்காளி சூப் செய்யலாம்.
குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் மசாலாப் பொருள்களைக் கலந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் மிகுந்த நன்மை பெறலாம். இதை சூடாக சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு சரியான வெப்பம் கிடைக்கும். குளிர்ந்த காலநிலையில் தக்காளி சூப் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தக்காளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் லுடீன், லைகோபீன் மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது. இது உடல்பருமன் தொடர்பான பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் தக்காளி சூப் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Viral Tomato Chutney: வெறும் 5 நிமிடம் போதும் சுவையான வைரல் தக்காளி சட்னி ரெடி!
தக்காளி சூப் செய்வது எப்படி?
தேவையானவை
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- நீர் - 3 கப்
- புதினா இலைகள் - தேவையான அளவு
தக்காளி சூப் செய்முறை
- முதலில் தக்காளியை சுத்தமாக கழுவி, சிறியதாக நறுக்கி குக்கரில் துண்டுகளாகச் சேர்க்க வேண்டும்.
- பிறகு அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, மூன்று விசில் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் தக்காளியை மிக்ஸியில் சேர்த்து இறுதியில் அரைக்க வேண்டும்.
- பின், இந்த தக்காளி கூழை பாத்திரம் ஒன்றில் சேர்த்து அடுப்பில் வைக்கலாம்.
- இந்த சூப் மிகவும் தடிமனாக இருப்பின், ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.
- இதில் சூப் கொதிக்கும் போது இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் சுவைக்கு உப்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு, புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- இந்தக் கலவையை நன்கு கொதித்த பின், அடுப்பை அணைத்து சுவையான தக்காளி சூப்பை சுவைக்கலாம்.
- இந்த சூடான தக்காளி சூப் அருந்துவது குளிர்ச்சியான நிலையில் நல்ல சுவையைத் தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Tomato Rice Recipe: சுவையில் பிரியாணியை மிஞ்சும் தக்காளி சாதம்… செய்முறை இங்கே!
தக்காளி சூப் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
தக்காளி சூப் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தக்காளி சூப் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
எலும்பு ஆரோக்கியம்
தக்காளி சூப்பில் வைட்டமின் கே, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான எலும்புகளை பெற உதவுகிறது. மேலும், இதில் உள்ள லைகோபீன் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை ஆஸ்டியோபெரோசிஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
தக்காளி சூப்பில் அதிக அளவிலான வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது தமனிக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், இதயத்தை பலப்படுத்துகிறது. மேலும், இது பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதையும், கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது. இது தவிர, இரத்தத்தில் பிளேட்லெட் செல்கள் குவிவதை தடுக்க தக்காளி சூப் உதவுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
தக்காளி சூப்பில் லைகோபின்கள் நிறைந்துள்ளது. இது தக்காளிக்கு நிறத்தக் கொடுக்கும் நிறமியாகும். பதப்படுத்தப்பட்ட தக்காளியில் மூலப்பொருள்களை விட அதிகளவிலான லைகோபீன்கள் உள்ளது. லைகோபீன்கள் முதுமையை ஏற்படுத்தும் மூலக்கூறான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸினேற்ற சேதத்தைத் தடுக்கிறது. இந்த உணவுகள் நாள்பட்ட மற்றும் பக்கவாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
இவ்வாறு குளிர்ந்த காலநிலையில் தக்காளி சூப்பை அருந்துவதன் மூலம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Red Juice Benefits: மழைக்காலத்தில் இந்த 5 சிவப்பு ஜூஸை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!
Image Source: Freepik