How to make Viral Tomato Chutney Recipe: பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் இருக்கும். இந்நிலையில், நாம் இட்லி தோசைக்கு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் வைத்து நம்மில் பலருக்கும் சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடும் குழந்தைகளுக்கும் சரி… ஒரே சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இட்லி, தோசைக்கு ஏற்ற ஏதாவது புதிய சட்னி செய்ய யோசிப்பவராக நீங்க இருந்தால், இது உங்களுக்கான பதிவு.
ஏனென்றால், இந்த முறை இணையத்தில் வைரலாகி வரும் வைரல் தக்காளி சட்னி வைத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். ஆம் சரியாகத்தான் படித்தீர்கள். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கு தாளிப்பு எதுவும் தேவை இல்லை. எளிமையான முறையில் வெறும் 5 நிமிடத்தில் வைரல் தக்காளி சட்னி எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Vazhaithandu Chutney: வாழைத்தண்டு சட்னி இப்படி செஞ்சி பாருங்க.. இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்..
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்
வைரல் தக்காளி சட்னி செய்முறை:

- முதலில் இதற்கு, நன்கு பழுத்த சிவந்த தக்காளிகளை தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் தக்காளியின் சுவை சட்னிக்கு கூடுதல் சுவையைத்தரும்.
- இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
- வெட்டியா தக்காளிகள் தவாவின் எண்ணெயில் நன்கு வறுபடுமாறு செய்யவேண்டும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும் அதன் தோல்களை எடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Tomato Coconut Chutney: நாவில் எச்சில் ஊறவைக்கும் தக்காளி தேங்காய் சட்னி எப்படி செய்வது?
- ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பூண்டு பற்களை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.
- அதை எடுத்து தக்காளியுடன் சேர்த்து இரண்டும் ஆறியதும் கையில் அல்லது உருளைக்கிழங்கு மசிக்கும் கருவியில் வைத்து நன்றாக மசிக்கவேண்டும்.
- இதை மசிப்பது தான் இதற்கு அதிக சுவையைத்தரும். எனவே, நல்ல மையாக பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து மசித்துக்கொள்ளவேண்டும்.
- இதில், தேவையான அளவு உப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லித்தழை, மிளகாய்த்தூள், எலுமிச்சை பழச்சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக ஸ்பூன் வைத்து கலந்துகொள்ள சுவையான வைரல் தக்காளி சட்னி ரெடி.
இந்த பதிவும் உதவலாம் : Spicy Milagai chutney: கார சாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை!
வைரல் தக்காளி சட்னி நன்மைகள்

ஆக்ஸிஜனேற்றிகள்
தக்காளி சட்னியில் உள்ள தக்காளி மற்றும் பேரீச்சம்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.
லைகோபீன்
தக்காளி சட்னியில் லைகோபீன் உள்ளது. இது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்
தக்காளியில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நார்ச்சத்து
தக்காளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Thanjavur Tomato Chutney: எளிமையான முறையில் நொடியில் தயாராகும் தஞ்சாவூர் தக்காளி சட்னி செய்வது எப்படி?
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல்
தக்காளியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு உதவும்.
UTI தடுப்பு
தக்காளியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
மசாலா
தக்காளி சட்னியில் பயன்படுத்தப்படும் மஞ்சள், சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உதாரணமாக, மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் சீரகம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும்.
Pic Courtesy: Freepik