Tomato coconut chutney for dosa: தென் இந்தியாவில் பல வீடுகளில் காலை உணவாக பெரும்பாலும் இட்லி மற்றும் தோசை தான் காணப்படும். தினமும் இட்லி, தோசை சாப்பிட்டாலும் நமக்கு சலிப்பதில்லை. ஏனென்றால், நமது விருப்பமான உணவாக அது மாறிவிட்டது. இட்லி, தோசை என்றதுமே நமக்கு நியாபகம் வருவது வகை வகையான சட்னியும், சாம்பாரும் தான்.
ஒரு தட்டில் சுட சுட இட்லி அல்லது தோசையை வைத்து. அதன் மீது சுட சுட சாம்பாரை ஊற்றி, அதை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அடஅடஅட… நினைக்கும் போதே உங்கள் நாவில் எச்சில் ஊறியிருக்கும். ஏனென்றால், டீ, காஃபியை போல உணவு நமது உணர்வாக உள்ளது. நீங்கள் பெரும்பாலும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்திருப்பீர்கள். எப்போதாவது, தக்காளி தேங்காய் சட்னி பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், கேட்பதற்கே உங்களுக்கு ஆர்வத்தை தூங்கு தக்காளி தேங்காய் சட்னி சுவையிலும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Idli Batter: குடல் புண்களை அகற்ற இட்லி மாவு உதவுமா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க…
நாவில் எச்சில் ஊறவைக்கும் தக்காளி தேங்காய் சட்னி எப்படி செய்வது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இந்த முறை தக்காளி தேங்காய் சட்னி செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10.
பழுத்த தக்காளி – 2 (பெரியது).
வரமிளகாய் – 7.
துருவிய தேங்காய் – 1/4 கப்.
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து – 1/4 ஸ்பூன்.
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுபவர்களா நீங்க? அப்ப முதலில் இத கவனியுங்க
தக்காளி தேங்காய் சட்னி செய்முறை:
- தக்காளி தேங்காய் சட்னி செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின்னர் அதில் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானவுடன், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியவுடன், ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- பின்னர், அதே கடாயில் நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கிக்கொள்ள வேணடும்.
- தக்காளியின் தோல் நிறம் மாறி வதங்கியதும் அதையும் தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Walnuts Vs Almonds: ஊறவைத்த பாதாம் அல்லது ஊறவைத்த வால்நட்; ஆரோக்கியத்திற்கு எது நல்லது?
- இப்போது மிக்ஸி ஜாரில் சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறவைத்த பொருட்களை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- பின்னர் அத்துடன் கால் தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மீண்டும் அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றினால் சுவையான தக்காளி தேங்காய் சட்னி தயார். இது இட்லி, தோசை, சப்பாத்தி பூரி என அனைத்து உணவுகளுக்கும் சிறந்தது.
Pic Courtesy: Freepik