Should You Eat Sweets On An Empty Stomach: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் காலை உணவு முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில், காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நாள் முழுவதும் உடல் ஆற்றலை பராமரிக்க உதவுகிறது. மேலும், இது அன்றைய நாள் உடலின் செயல்பாட்டைத் தீர்மானிக்க ஆதரவாக அமைகிறது. ஆனால், காலையில் வெறும் வயிற்றில் இனிப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்குமா?
இனிப்பு சாப்பிடுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால், காலையில் இனிப்பு சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை நிறைந்த உணவுகளின் உயர்வு உயர் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க இன்சுலின் வெளியிட கணையத்தைத் தூண்டுகிறது. இது அன்றைய நாளில் ஆற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதனால், சோர்வாகவும், எரிச்சலாகவும் கவனம் செலுத்த முடியாத சூழல் நிகழலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Body Heat Reduce Foods: சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லுனு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
ஊட்டச்சத்து உட்கொள்ளலில் தலையீடு
ஒரு நாளின் முதல் உணவாக இனிப்புகளை எடுத்துக் கொள்வது ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் தலையிடுகிறது. இனிப்புகள் பெரும்பாலும் வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இல்லாதவையாகும். ஆனால், பழங்கள், புரதம், முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை விட, இனிப்புகளைத் தேர்ந்தெடுப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்து இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால், உடல் உகந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நாள் முழுவதும் சிறப்பாக செயல்படவும் முடியாமல் போகலாம்.
வெறும் வயிற்றில் இனிப்பு உட்கொள்ளலின் விளைவுகள்
உடல் செயலிழப்பு
வெறும் வயிற்றில் சர்க்கரையை உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இது விரைவான ஆற்றலைத் தரலாம். எனினும், இந்த ஆற்றல் அதிகரிப்பு பொதுவாக குறுகிய காலமாகக் கருதப்படுகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவு குறைவதால் உடல் செயலிழப்பு ஏற்படலாம். இது உடலை சோர்வாகவும், மந்தமாகவும் உணர வைக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளில் உடலுக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே, காலை உணவில் முதன்மையாக இதை எடுத்துக் கொள்வது ஊட்டச்சத்து உட்கொள்ளலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Protein Powder Side Effects: அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்
பசி அதிகரிப்பு
சர்க்கரை நிறைந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, அந்த நாள் முழுவதும் அதிக இனிப்பு உணவுகளுக்கான ஏக்கத்தைத் தூண்டுகிறது. ஏனெனில், சர்க்கரையானது நரம்பியக் கடத்தியான டோபமைனின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இதனால், உடல் சர்க்கரையின் மீது ஒரு சார்பு நிலையை உருவாக்கலாம். இதன் காரணமாக, பசி அதிகரித்தல் மற்றும் சீரான உணவு பராமரிப்பில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை அதிகரிப்பு
சர்க்கரை நிறைந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. இவை இரத்த சர்க்கரையை சீராக்க இன்சுலினை வெளியிட கணையத்தைத் தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகலாம். மேலும், சர்க்கரையை உட்கொண்ட பிறகு உடனேயே சோர்வு மற்றும் பசியை உணரலாம்.
எடை அதிகரிப்பு
அதிகப்படியான சர்க்கரையை வழக்கமாக உட்கொள்ளல் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இதனால், உடல் பருமன், வகை 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் இது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படலாம்.
காலை நேரத்தில் இனிப்புகளை உட்கொள்ள விரும்புபவர்களுக்கு மேலும் பசி அதிகரிக்கலாம். இது முறையற்ற உணவு உட்கொள்ளும் முறையை தூண்டலாம். எனவே, ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான காலை உணவுடன் நாளைத் தொடங்குவது நல்லது. இது இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிப்பதுடன், மேலே கூறப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வெறும் வயிற்றில் அஜ்வைன் டீ குடிப்பதால் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
Image Source: Freepik