வெறும் மூன்று பொருள்கள் போதும்! சுவையான பாதாம் பிசின் கஸ்டர்ட் ரெடி

  • SHARE
  • FOLLOW
வெறும் மூன்று பொருள்கள் போதும்! சுவையான பாதாம் பிசின் கஸ்டர்ட் ரெடி

இது இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் தென்மேற்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கிறது. பாதாம் பிசினில் 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு, 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்களும் நிறைந்துள்ளது. மேலும், இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணம் இருக்காது. மேலும், இது தண்ணீரில் கரையக்கூடியதாகும். இது காயவைத்து பிறகு சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜெல்லி போன்ற பாதாம் பிசினை காயவைத்தால், அது கட்டியாகி பார்ப்பதற்கு கற்கண்டு போல காணப்படும். இந்த காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய், தக்காளி சட்னியை மிஞ்சும் சுவையில் சூப்பரான புதிய சட்னி ரெசிபி!

பாதாம் பிசின் கஸ்டர்ட் தயாரிக்கும் முறை

  • பாதாம் பிசின் – 4
  • பாஸ்மதி அரிசி – அரை கப்
  • நட்ஸ் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
  • பால் பவுடர் – 3 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • மாம்பழம் – 1
  • சர்க்கரை - அரை கப்
  • பால் – அரை லிட்டர்

பாதாம் பிசின் தயார் செய்யும் முறை

  • முதலில் பாதாம் பிசினை ஓரிரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோல்களை நீக்கி, மாம்பழத்தை நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • பிறகு அதனுடன், ஊறிய பாதாம் பிசினை சேர்த்து கலந்து கொண்டு, அந்த கலவையை தனியாக வைத்துக்கொள்ளலாம்.
  • அதன் பிறகு, பாஸ்மதி அரிசியை ஊறவைத்து உலர்ந்த துணியில் வைத்து, நிழலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த காயவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு தேங்காய் துருவலுடன், சிறிது பால் சேர்த்து அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பற்களுக்கு பலம் தரும் பொரிவிளங்கா உருண்டை! உங்க வீட்டில் இப்படி ஈஸியா செய்யுங்க

  • ஒரு கடாய் ஒன்றில், பாலைக் காய்ச்சி, பால் பொங்கிய பிறகு, அதில் அரிசி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இதை வேகவைக்கும் போது, அதில் சர்க்கரை மற்றும் பால்பவுடரை சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு இதை ஆறவைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடலாம். சிறிது நேரம் குளுமையானவுடன், பரிமாறும் கிண்ணத்தில் அடியில் அரிசி கலவையை வைத்து, அதன் மேல் மாம்பழ பாதாம் பிசின் கலவையை வைக்க வேண்டும்.
  • இந்த கலவையின் மீது நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றைத் தூவி பரிமாற வேண்டும். இதை குளுகுளுவென சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும்.
  • இதை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும விரும்பி சாப்பிடுவர்.

பாதாம் பிசின் நன்மைகள்

  • பாதாம் பிசின் உட்கொள்ளல் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. மேலும், இது உடலின் சூட்டைக் குறைக்க உதவுகிறது.
  • பாதாம் பிசினில் உள்ள புரதம், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் எலும்பை வலுப்படுத்தி, உடலுக்கு வலிமை தருகிறது. இது கரு வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • பாதாம் பிசினில் நிறைந்துள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது. மேலும் இது அழற்சி, வீக்கம், முகப்பருக்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.
  • பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை குறைப்பு இரண்டிலும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

Image Source: Freepik

Read Next

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி, மீன் எண்ணெய்! நெய்யில் தான் கலப்படமா?

Disclaimer