திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி, மீன் எண்ணெய்! நெய்யில் தான் கலப்படமா?

  • SHARE
  • FOLLOW
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி, மீன் எண்ணெய்! நெய்யில் தான் கலப்படமா?

இது குறித்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி, ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி. லட்டுக்களின் தரம், சுவை மற்றும் அமைப்பு குறித்து விசாரணை நடத்தினர். இதில் பிரசாதத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய, தேவஸ்தானம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. சுவை மற்றும் தரத்தை மீட்டெடுக்க, இந்த குழுவானது, நெய்யின் மாதிரிகளை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) கால்நடை மற்றும் உணவுக்கான பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இதில் வெளிநாட்டு கொழுப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருமலையில் வழங்கப்படும் லட்டு வகைகள்

திருமலை திருப்பதில் மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆஸ்தானம் லட்டு

இது சிறப்பு பண்டிகை சந்தர்ப்பங்களில் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக விநியோகிக்கப்படும் லட்டு ஆகும். இந்த லட்டுகள் ஒவ்வொன்றும் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

கல்யாணோத்ஸவம் லட்டுகள்

இந்த லட்டுகள் கல்யாணோத்ஸவத்தில் பங்கேற்பவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

புரோக்தம் லட்டுகள்

இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும். இந்த லட்டுகள் திருமலை கோவிலில் அனைத்து யாத்ரீகர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்த புரோக்தம் லட்டுகள் சுமார் 175 கிராம் எடை கொண்டதாகும்.

திருப்பதி லட்டுவில் வெளிநாட்டு கொழுப்புகள்

ஆய்வில் வெளிவந்த தகவலின் படி, பசுவின் பால் கொழுப்புக்கான ISO/IDF குறிப்பு மதிப்புகளுக்கு அப்பால் நெய் மாதிரியின் மதிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பசுவின் பால் கொழுப்புக்கான மதிப்புகளுக்கு மாதிரியின் மதிப்பு இருப்பின், அதில் வெளிநாட்டு கொழுப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆய்வின் படி, சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளிவிதை, Wheat Germ, பருத்தி விதை, மீன் எண்ணெய், தேங்காய், Palm Kernel Fat, பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்பு போன்றவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டதாவது, சில சூழ்நிலைகளில் தவறான நேர்மறையான முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Purattasi Viratham: புரட்டாசி விரதம் இருந்தால் இவ்வளவு நன்மைகளா?

அதன் படி ஒற்றை மாடுகளிலிருந்து பெறப்பட்டது, ராப்சீட் எண்ணெய், பருத்தி அல்லது பாமாயில் போன்ற தூய தாவர எண்ணெய்களை விதிவிலக்காக அதிக அளவில் உண்ணும் பசுக்களிடமிருந்து பெறப்பட்டது போன்ற நிபந்தனைகளை உள்ளடக்குகிறது. இது தவிர, பசுக்களுக்குக் குறைவாகத் தீவனம் கொடுப்பது அல்லது கொலஸ்ட்ராலை அகற்றுவது போன்ற தொழில்நுட்ப சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படும் பால் போன்ற நிகழ்வுகள் உட்பட, விளைவு தவறாகப் போகும் பல நிபந்தனைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆய்வக அறிக்கை குறித்து ஆந்திர அரசு அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

திருப்பதி லட்டு விவகாரம் தீவிரமான நிலையில், இந்த ஆய்வறிக்கையை தீவிரமாக விசாரித்து தெளிவுபடுத்தக்கோரி பல்வேறு தரப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: கண்கள் ஷார்ப்பா இருக்கணுமா? உங்க டயட்ல இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க!

Image Source: Freepik

Read Next

கண்கள் ஷார்ப்பா இருக்கணுமா? உங்க டயட்ல இந்த உணவுகளை சேர்த்துக்கோங்க!

Disclaimer

குறிச்சொற்கள்