குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?


மேலும், கூடுதலாக கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து நார்ச்சத்துக்கள் கிடைக்கப் பெறுகிறது. இந்த நார்ச்சத்துக்கள் உணவு செரிமான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்த கார்போஹைட்ரேட்டுகள் குடல் இயக்கங்களை ஆதரித்து, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. மூளை ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில், மூளை நினைவகம் மற்றும் செறிவு போன்ற அறிவாற்றல் செயல்முறைகளுக்கு குளுக்கோஸ் தேவையான ஒன்றாகும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் செரிமான அமைப்பு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடக்கத்தான் கீரையை இப்படி சாப்பிட்டா மூட்டு வலி மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராதாம்!

குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட்டுகள் எவ்வாறு உதவுகிறது?

குடல் பாக்டீரியா வளர்ச்சிக்கு

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்கள் உதவுகிறது. இதில் ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் அடங்குகிறது. இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. அதன் படி பூண்டு, வெங்காயம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற உணவுகளிலிருந்து ப்ரீபயாடிக்குகளை எடுத்துக் கொள்ளலாம். இவை குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலை செரிமானத்தை ஆதரிக்கிறது. மேலும் இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்

பொதுவாக கார்போஹைட்ரேட்டுகள், அதிலும் குறிப்பாக உணவு நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தை சீராக வைக்கவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்பாட்டிற்கு

நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்பாடு அவசியமாகும். அதன் படி, பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களில் நிறைந்துள்ள சில கார்போஹைட்ரேட்டுகள், உடலானது இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது ஒரு நிலையான செரிமான சூழலை வழங்குவதன் மூலம், கார்போஹைட்ரேட்டுகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் திறம்பட உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Tea Benefits: உடலின் ஒட்டுமொத்த நன்மைகளையும் பெற செம்பருத்தி டீ ஒன்னு போதும்!

செரிமான கோளாறுகளிலிருந்து விடுபட

டைவர்டிகுலிடிஸ் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்டவை செரிமான கோளாறுகளின் அபாயத்தைக் குறிக்கிறது. அவ்வாறு அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை இந்த செரிமானக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த உணவுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், குடல் புறணியை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க

சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற உணவுகளில் காணப்படுகிறது. எளிய கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் மெதுவாக வெளியிடுகிறது. இந்த நிலையான வெளியீடு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிப்பதுடன், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

எடை நிர்வாகத்தை ஆதரிக்க கார்போஹைட்ரேட்டுகள்

அதிக நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் வயிறு நிரம்பிய முழுமை உணர்வை நீண்ட காலத்திற்குத் தருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல் குறைக்கப்பட்டு, எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய அதிக நேரம் எடுக்கலாம். மேலும், இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வாறு கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது அதிகப்படியான உணவைத் தடுத்து, இறுதியில் எடை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இவ்வாறு கார்போஹைட்ரேட்டுகள் குடல் ஆரோக்கியத்தைத் திறம்பட செயல்பட வைக்கிறது. மேலும் இது செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு ஸ்பூன் மொரிங்கா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Andhra Mutton Biryani: ஆஹா பிரியாணினா இப்படி இருக்கணும்… ஆந்திரா ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்முறை!

Disclaimer