Tirupati Laddu Recipe in Tamil: லட்டு என்றாலே நாம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருப்பதி கோயில் பிரசாதம் லட்டு தான். அதன் சுவையும் மனமும் அப்பப்பா…. இப்போ நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறும்.
திருமலை திருப்பதி லட்டுவுக்கு பல வரலாறு உள்ளது. எவ்வளவு லட்டு சாப்பிட கொடுத்தாலும், திருப்பதி கோயில் பிரசாதத்தை தனியாக அடையாளம் காணலாம். இவ்வளவு புகழ்பெற்ற திருப்பதி கோயில் பிரசாதமான லட்டை அதே சுவையில் வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Soya kola urundai: மீள் மேக்கர் வைத்து சுவையான கோலா உருண்டை செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 100 கிராம்.
சர்க்கரை - 100 கிராம்.
காய்ச்சி ஆற வைத்த கெட்டி பால் - 200.
கடலை மாவு - 400 கிராம்.
கற்கண்டு - 2 ஸ்பூன்.
நெய் - தேவையான அளவு.
எண்ணெய் - பூந்தி பொரிக்க.
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை.
ஏலக்காய் - 5 நன்றாக இடித்தது.
முந்திரி - 1 கைப்பிடி.
திராட்சை - 1 கைப்பிடி.
பத்தாம் - துருவியது 1 ஸ்பூன்.
சர்க்கரை - ஒன்னேகால் கிலோ (சர்க்கரை பாகு தயாரிக்க).
திருப்பதி லட்டு செய்முறை:

- முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, அரிசி மாவு, பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
- பின்னர், அதில் சலித்த கடலை மாவையும் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் தண்ணீராக கரைத்துக்கொள்ளவும்.
- தேவைப்பட்டால் கூடுதலாகப் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். பால் சேர்க்கும்போதுதான் திருப்பதி லட்டின் சுவை அப்படியே வரும்.
இந்த பதிவும் உதவலாம் : திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி, மீன் எண்ணெய்! நெய்யில் தான் கலப்படமா?
- இந்த மாவைக்கரைத்து அரை மணி நேரம் புளிக்க விடவேண்டும்.
- இப்போது, ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, இரண்டையும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, ஒரு கம்பி பாகுபதம் வந்தவுடன் இறக்கவும்.
- ஒரு கடாயில் 6 ஸ்பூன் நெய் சேர்த்து, அது நன்றாக சூடானவுடன் பூந்தி தட்டு அல்லது அரிகரண்டியில் மாவை ஊற்றி. பூந்தியை பொன்னிறத்தில் பொறித்து எடுக்கவும். பூந்தி சிறிது மென்மையான பத்திலேயே இருக்க வேண்டும்.
- பொரித்த பூந்தியை சர்க்கரை பாகில் சேர்த்து 10 நிமிடம் நன்கு ஊறவைக்கவும்.
- பின்னர், அந்த பூந்தியை மிக்சியில் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் மூன்று பொருள்கள் போதும்! சுவையான பாதாம் பிசின் கஸ்டர்ட் ரெடி
- இப்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கற்கண்டு, பச்சை கற்பூரம், ஏலக்காய் 4 ஸ்பூன் நெய் சேர்த்து லட்டு பிடிக்கவும். இதோ, திருப்பதி லட்டு வீட்டிலேயே தயார்.
Pic Courtesy: Freepik