How To make Sorakkai Burfi In Tamil: தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும், இனிப்புகளும் தான். தீபாவளி வர ஒரு வாரம் இருக்கும் போதே நமது வீடுகளில் பலகாரங்கள் செய்ய துவங்கி விடுவார்கள். அதிரசம், லட்டு, குளோப் ஜாமும், முறுக்கு, ஜாங்கிரி என இனிப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுக்கி வைப்பார்கள்.
நமக்கு பிடித்த இனிப்புகளை ஆரோக்கியமாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? அப்படி நீங்கள் ஏதாவது புதிதாக இனிப்பு செய்ய முயற்சி செய்தால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ஆம், சுரைக்காயை வைத்து பர்பி செய்வது எப்படி என கூறப்போகிறோம். இந்த தீபாவளிக்கு சுரைக்காய் பர்பி செய்து உங்க குடும்பத்தினரை அசத்துங்க.
இந்த பதிவும் உதவலாம் : Carrot Laddu: கேரட்டை வைத்து சுவையான லட்டு செய்யலாமா? இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
முழு கொழுப்புள்ள பால் - 500 மில்லி
இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
(குறிப்பு : கோவா'க்கு பதில், பால் பவுடர், கண்டென்ஸ்ட் மில்க் பயன்படுத்தலாம் )
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் நறுக்கியது - சிறிது
முந்திரி நறுக்கியது - சிறிது
பிஸ்தா நறுக்கியது - சிறிது
உலர் திராட்சை - 7
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த ரோஜா இதழ் - 20
நெய் - 2 தேக்கரண்டி
சுரைக்காய் பர்பி செய்முறை:

- முதலில் சுரைக்காயை தோல் சீவி, மூன்று துண்டுகளாக நறுக்கவும்.
- இதையடுத்து, சுரைக்காயை துருவி, அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, துருவிய சுரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 2 நிமிடம் வதக்கியபின், முழு கொழுப்புள்ள பால் ஊற்றவும்.
- இப்போது சுரைக்காயை பாலில் வேகவைக்கவும்.
- பால் சுண்டும் வரை கைவிடாமல் கிண்டவும்.
இந்த பதிவும் உதவலாம் : சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வாவை இப்படி செய்யுங்க! மிச்சமே இருக்காது
- பால் சுண்டிய பின், இனிப்பில்லாத கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- கோவா'விற்கு பதில் பால் பவுடர் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் பயன்படுத்தலாம்.
- அனைத்தும் சேர்ந்து வரும் வரை கிளறவும்.
- அடுத்து இதில் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, திராட்சை, ரோஸ் எசென்ஸ், ஏலக்காய் தூள், காய்ந்த ரோஜா இதழ் சேர்க்கவும்.
- இவற்றை நன்கு கலந்து விட்டு, ஆறவிடவும். இதற்கிடையில், டின்'னை கிரீஸ் செய்யவும்.
- பட்டர் பேப்பர் வைத்து, பர்பி கலவையை போடவும்.
- இதன் மேல் நெய் தடவி, 4 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
- 4 மணி நேரம் ஆன பின், ஓரங்களை ரிலீஸ் செய்யவும்.
- டின்'னை திருப்பி போட்டு தட்டவும்.
- விருப்பமான அளவில் நறுக்கி பரிமாறவும்.
இந்த பதிவும் உதவலாம் : Onion Rice Recipe: வெறும் 2 வெங்காயம் இருந்தா போதும்… 10 நிமிஷத்தில் சுவையான ரைஸ் ரெடி!
சுரைக்காய் பர்பி நன்மைகள்:

நீரேற்றம்: சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரழிவைத் தடுக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்: குப்பியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்.
எடை மேலாண்மை: சுரைக்காய் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது எடை குறைக்க உதவும்.
இரத்த சர்க்கரை: சுரைக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
இந்த பதிவும் உதவலாம் : அனிமியாவை அடித்து விரட்டும் அருமையான பீட்ரூட் ரெசிபி!
இதய ஆரோக்கியம்: பூசணிக்காயின் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
சுரைக்காய் பர்ஃபி ஒரு ஆரோக்கியமான விருந்தாக இருக்கலாம். ஆனால், மற்ற உணவைப் போலவே, இதையும் மிதமாக சாப்பிட வேண்டும்.
Pic Courtesy: Freepik