சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வாவை இப்படி செய்யுங்க! மிச்சமே இருக்காது

  • SHARE
  • FOLLOW
சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வாவை இப்படி செய்யுங்க! மிச்சமே இருக்காது

பெரும்பாலும் கடைகளில் வாங்கும் அல்வா மிகவும் சரியான பதத்தில் இருக்கும். எனினும் வீடுகளிலேயே சிறந்த முறையில் பல்வேறு பொருள்களைக் கொண்டு அல்வா தயார் செய்யலாம். அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி அல்வா தயார் செய்யலாம். இதில் எளிமையான முறையில் வீட்டிலேயே சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Onam Special Recipes: வாயில் கரையும் வாழைப்பழ அல்வா! இப்படி ஈஸியா செஞ்சி பாருங்க

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயாரிப்பது எப்படி?

தேவையானவை

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
  • வெல்லம் - 125-150 கிராம்
  • கோதுமை மாவு - 2 டீஸ்பூன்
  • நெய் - 1.5 டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள்
  • நெய் - 3-4 டீஸ்பூன்
  • முந்திரி - வறுத்தது
  • தண்ணீர் - தேவையான அளவு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா செய்முறை

  • முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • அதை ஒரு இட்லி சட்டியில் சரியான அளவு தண்ணீர் ஊற்றி வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இது நன்கு வெந்த பிறகு, அதன் தோலை உரித்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்னர் அல்வாவிற்குத் தேவையான இனிப்புக்காக வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • வெல்லம் நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அது சூடான பிறகு, அதில் ஒன்றரை ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்.
  • இதில் நெய் உருகிய பிறகு, அதில் 2 டீஸ்பூன் கோதுமை மாவை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Sweet Potato Benefits: சர்க்கரை வள்ளி கிழங்கில் இவ்வளவு நன்மை இருக்கா?!

  • அதன் பின், அரைத்து வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பேஸ்ட்டைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • பிறகு இதில் காய்ச்சி வைத்த வெல்லக் கரைசலை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி ஊற்ற வேண்டும்.
  • இந்தக் கலவையை மிதமான தீயில் வைத்து கிளறி விடலாம். பின் மீண்டும் ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி கிளர வேண்டும்.
  • இவ்வாறு கலவையானது அல்வா பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • பிறகு அடுப்பை அணைத்து, இறுதியாக வறுத்த முந்திரியை அதில் சேர்த்து கிளற வேண்டும்.
  • இப்போது அருமையான சுவையில், சூடான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயாரானது.
  • இதை அப்படியே வாழை இலை ஒன்றில் வைத்து பரிமாறலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ, சி, டி, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சுவாச பிரச்சனை உடையவர்களுக்கும், மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கும், வயிற்றுப்புண் கொண்டிருப்பவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.
  • இது உடல் எடையைக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதில்லை. இது பசியை கட்டுப்படுத்துவதுடன், வயிறு நிறைந்த திருப்தியைத் தருகிறது.
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். இது புறஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை கிடுகிடுவென குறைக்க உதவும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சூப்!!

Image Source: Freepik

Read Next

Sabudana: இவங்க எல்லாம் ஐவ்வரிசியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது!

Disclaimer